RENEWABLE

  • ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டும்.

  • பொறுமை மிக அவசியம்

  • ஆக்கியவனுக்கு சட்டியும் பானையும்தான் மீதம்.

  • ஆகும் காலம் ஆகும், போகும் காலம் போகும்.

  • ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்.

  • ஆசை இருக்கு ஆனை மேல் ஏற; அம்சம் இருக்கு மண் சுமக்க!

  • ஆசை உள்ளளவும் அலைச்சலும் உண்டு!

  • ஆசை வெட்கம் அறியாது.

  • ஆடத் தெரியாத ஆட்டக்காரி மேடை கோணல் என்றாளாம்.(A bad workman blames his tools.

  • ஆட்டசெல்லம், பூட்டசெல்லம், அடிக்க செல்லம் அயலாரகத்திலே!

  • ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இருக்குமா?

  • ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்; பாடிக் கறக்கிற மாட்டை பாடிக் கறக்க வேண்டும்.

  • ஆடிப் பட்டம் தேடி விதை.

  • ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை பெய்யும்.

  • ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.

  • ஆடிக் காற்றில் அம்மியே பறக்கும் பொது இலவம்பஞ்சு என் கதி என்ன என்று கேட்டதாம்!

  • ஆடிக்கு ஒரு தரம் அமாவாசைக்கு ஒரு தரம்.

  • ஆடு கடிக்குமுனு அறைக்குள்ள படுத்தவ, அவுசாரியாப் போக பேயாய் அலைஞ்சாலாம்.

  • ஆடு நனைகிறதே என்று ஒநாய் அழுமாம்.

  • ஆடு பகையாம் குட்டி உறவாம்.

  • ஆடு வளர்க்றது அழகு பாக்றத்துக்கு இல்லெ, கோழி வளக்குறது கொஞ்சு பாக்றதுக்கு இல்லெ.

  • ஆடும் திரிகை அசைந்து நிற்குமுன், ஓடும் சிந்தை ஒன்பதாயிரம்.

  • ஆட்டுக்கு வால் அளவறிந்து வைத்திருக்கிறது.

  • ஆட்டை தோளில் போட்டுக்கொண்டு, ஊரெல்லாம் தேடினானாம்.

  • ஆட்டக்காரி ஆகவில்லை என்பதற்காகத் தோட்டக்காரியைச் சிங்காரித்தது போல.

  • ஆண்மூலம் அரசாளும், பெண்மூலம் நிர்மூலம்

  • இது 'ஆண்மூலம் அரசாளும், பெண்மூலம் நிர்மலம்' என்பதன் திரிந்த வழக்கு.

  • ஆண்மூலம் அரசாளும், பெண்மூலம் நிர்மலம்

  • ஆண்டை எப்ப சாவான் திண்ண எப்ப காலியாகும்?

  • ஆண்மூலம் அரசாளும், பெண் மூலம் (வழியாக) தெளிவு, நிம்மதி என்பது பொருள்.

  • ஆத்தாளும் மகளும் அவுசாரியாப் போயி, முந்தானையில வச்சிருந்த முக்கால் ரூபாயயும் புடுங்கிட்டு விட்டாங்களாம்.

  • ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.

  • ஆத்திரத்த அடக்குனாலும் மூத்திரத்த அடக்கக்கூடாது.

  • ஆத்துக்குப் போயும் வேர்த்து வடிஞ்ச கதையா.

  • ஆபத்திற்குக் குற்றம் (தோஷம்) இல்லை!

  • ஆயிரங்கலம் நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி போதும்.

  • ஆயிரம் தலை கண்டால் ஒரு கோயிலைக் கண்டது போல

  • ஆயிரம் பேரைக் கொன்றவர் அரை வைத்தியர்

    • இது 'ஆயிரம் வேரைக் கொன்றவர் அரை வைத்தியர்' என்பதன் திரிந்த வழக்கு.
  • ஆயிரம் வேரைக் கொன்றவர் அரை வைத்தியர்ஆயக்காரன் ஐந்து பணங் கேட்பான்; அதாவெட்டுக்காரன் ஐம்பது பணங் கேட்பான்

    • மூலிகைக்காக ஆயிரம் வேரைக் கொன்றவர் அரை வைத்தியர் என்பது பொருள்.
  • ஆயிரம் வந்தாலும் அவசரப் படாதே.

  • ஆயிரம் காசு கொடுத்துக் குதிரை வாங்கியவனுக்கு, அரை காசு கொடுத்து தீனி வாங்க முடியலையாம்!

  • ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.

  • ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை அன்னை தந்தையே அன்பின் எல்லை

  • ஆயிரம் பொய் சொன்னாலும் ஒரு கல்யாணம் செய்து வை.

  • ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.

  • ஆரால் கேடு, வாயால் கேடு.

  • ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.

  • ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி.

  • ஆலயம் தொழுவது சாலமும் நன்று.

  • ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை.

  • ஆலும் வேலும் பல்லுக்குறுதி.

  • ஆழமறியாமல் காலை இடாதே.

  • ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே!

  • ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.

  • ஆள் கூடுனா பாம்பு சாகுமா?

  • ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.

  • ஆள் அறிந்து ஆசனம் போடு, பல் அறிந்து பாக்குப் போடு

  • ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.

  • ஆள் பாதி, ஆடை பாதி.

  • ஆளப்பாத்து ஆசனம் போடு, பல்லைப்பாத்து பாக்குப்போடு.

  • ஆழம் தெரியாமல் காலை விடாதே.

  • ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.

  • ஆறின கஞ்சி பழங் கஞ்சி.

  • ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?

  • ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.

  • ஆற்றோடு போறவனுக்கு ஊர்ப்போக்கு எதற்கு.

  • ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ்.

  • ஆறு பெண்ணைப் பெத்தால் அரசனும் ஆண்டியாவான்!

  • ஆறு கெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.

  • ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.

  • ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலும் வைக்காதே.

  • ஆனா அந்த மடம் ஆகாட்டி சந்த மடம்.

  • ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.

  • ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.

  • ஆனைக்கும் அடி சறுக்கும்.

  • ஆனைக்கு கோவணம் கட்டு-(ரதைப்)-வதைப்போல...

  • செய்வதற்குக் கடினமான/முடியாத வேலையைப்பற்றிக் குறிப்பிடும்போது சொல்லப்படும் வார்த்தைகள்

  • ஆனை படுத்தால் ஆள் மட்டம்.

  • ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே.

  • ஆனைக்கு விளாம்பழம் ஓட்டோடு.

  • ஆனைப் பசிக்கு சோளப் பொரி

  • ஆனை கொழுத்தால் வாழைத்தண்டு, மனுசன் கொழுத்தால் கீரைத்தண்டு.

  • ஆனைய புடின்னா பூனைய புடிச்சானாம்.

  • ஆத்தா அம்மணமாம் கும்பகோணத்தில் கோ தானமாம்.

  • ஆசை இருக்கு தாசில் பண்ண அதிருஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க.

  • ஆசைக்கு ஒரு பெண்ணும், ஆஸ்திக்கு ஒர் ஆணும்!!

  • ஆலயம் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்.

  • ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாது.

  • ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டா?

  • இக்கரைக்கு அக்கரை பச்சை.

  • இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்.

  • இஞ்சி இலாபம் மஞ்சளில்.

  • இஞ்சி விற்ற லாபம் மஞ்சளில் போயிற்று.

  • இஞ்சி தின்ன குரங்கு மாதிரி....

  • இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.

  • இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடிங்கிய கதையாக.....

  • இட்ட உறவு எட்டு நாளைக்கு, நக்கின உறவு நாலு நாளைக்கு.

  • இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை.

  • இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்.

  • இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.

  • இரக்கப் போனாலும் சிறக்கப் போ.

  • இரண்டு வீட்டிலும் கலியாணம், இடையிலே செத்ததாம் நாய்க்குட்டி.

  • இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.

  • இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே.

  • இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை, இராச திசையில் கெட்டவனுமில்லை

  • இராசா மகளானாலும் கொண்டவனுக்கு பெண்டுதான்.

  • இருக்க எடம் கொடுத்த படுக்க பாய் கேப்பான்.

  • இருக்குறவ அள்ளி முடியறா.

  • இருட்டுக்கு முந்தி இரவு உணவு.

  • இரும்பு அடிக்ற எடத்துல ஈக்கு என்ன வேலை?

  • இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா.

  • இரும்பூறல் காணாமல் இரும்பிச் செத்தான்.

  • இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான்.

  • இருவர் நட்பு ஒருவர் பொறை.

  • இலவு காத்த கிளி போல....

  • இல்லாது பிறாவது அள்ளாது குறையாது.

  • இல்லது வாராது; உள்ளது போகாது.

  • இல்லறம் அல்லது நல்லறமல்ல.

  • இல்லாததை கொண்டா, கல்லாததைப் பாடு (என்பர்கள், எங்கிறார்கள்)

  • இல்லாதவனுக்கு பசியேப்பம், இருப்பவனுக்கோ புளியேப்பம்.

  • இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?

  • இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.

  • இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.

  • இளங்கன்று பயமறியாது.

  • இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து.

  • இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.

  • இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்குக் கொள்ளு!

  • இளைய பிள்ளைக்காரிக்குத் தலைப் பிள்ளைக்காரி வைத்தியம் சொன்னது போல.

  • இறங்கு பொழுதில் மருந்து குடி.

  • இறுகினால் களி , இளகினால் கூழ்.

  • இரைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.

  • இரைத்த கிணறு ஊறும், இரையாத கிணறு (கேணி) நாறும்.

  • இனம் இனத்தோடே வெள்ளாடு தன்னோடே

  • இனம் இனத்தோடே எழைப்பங்கன் பணத்தோடே.

  • இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுக்கமாட்டானா?

  • ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்; தீயோனுக்கு உடலெங்கும் விடம்.

  • ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.

  • ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.

  • ஈர நாவிற்கு எலும்பில்லை.

  • ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாள் ஆக்குகிறான்.

  • ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை.

  • உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்.

  • உட்கார்ந்து தின்றால் மலையும் கரையும்.

  • உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும்.

  • உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.

  • உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா?

  • உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா

  • உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை.

  • உடையவன் இல்லாதது ஒரு மொழந்துண்டு.

  • உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.

  • உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு.

  • உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்காதே.

  • உண்டிக் கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்

  • உண்டு கொழுத்தால் நண்டு வளையில் இராது.

  • உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.

  • உண்ணீர் உண்ணீரென்றே ஊட்டாதார் தம் மனையில் உண்ணாமை கோடி பெறும்.

  • உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்.

  • உதட்டில் வெல்லம், உள்ளத்தில் கள்ளம்/விஷம்.

  • உதிரம் பெருத்தால் உத்திரத்திற்கு ஆகாது.

  • உதிரியா கிடந்தாலும் மல்லிகை! உப்பா கிடந்தாலும் வெள்ளை

  • உப்பிட்டவரை உள்ளளவும் நினை.

  • உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான்

  • உப்பில்லாப் பண்டம் குப்பையிலே

  • உப்பில்லாப் பண்டம் பாழ், குடியில்லா வீடும் பாழ்.

  • உப்பில்லா பத்தியக்காரன் ஊறுகாய்க்கு ஆசைப்பட்டானாம்!

  • உப்புல தெரியுமாம் துப்பு, நீருல தெரியுமாம் சீரு.

  • உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?

  • உரம் ஏற்றி உழவு செய்

  • உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?

  • உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.

  • உலை வாயை மூடினாலும் ஊர் வாயை மூடமுடியாது!

  • உலோபிக்கு இரட்டை செலவு.

  • உழக்கு பணம் இருந்தால்தான் பதக்கு சமத்து இருக்கும்.

  • உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.

  • உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.

  • உள்ள அளவும் உப்பிட்நினைடவரை .

  • உள்ளங்கை முன்னால் போனால் பின்னங்கை தானே வரும்.

  • உள்ளங்கை புண்ணுக்கு கண்ணாடி வேண்டுமா?

  • உள்ளது சொல்ல ஊரும் அல்ல நல்லது சொல்ல நாடும் அல்ல

  • உள்ளது போகாது இல்லது வாராது.

  • உள்ளதைச்சொன்னால் நொள்ளைக் கண்ணனுக்கு கோவமாம்!

  • உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய.

  • உளவு இல்லாமல் களவு இல்லை.

  • உளறுவாயனுக்கு ஊமையனே மேல்.

  • உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது. [இதனை இப்படி கூட கூறுவார்கள்-பார்க்காத உறவும் கேட்காத கடனும் பாழ்]

  • உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்.

  • ஊசி முனையில் தவமிருந்தாலும் உன்னதுதான் கிட்டும்.

  • ஊசி முனையில் மூன்று குளம்

  • ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.

  • ஊணுக்கு முத்துவான் வேலைக்குப் பிந்துவான்.

  • ஊண் அற்றபோது உடலற்றது.

  • ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு.

  • ஊமை சொப்பனம் கண்டாற் போல..

  • ஊருடன் ஒட்டி வாழ்.

  • ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.

  • ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.

  • ஊர்க்குருவியைக் கொல்ல இராமபாணமா வேணும்?

  • ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.

  • ஊரில் கல்யாணம் மார்பில் சந்தனமா?

  • ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி.

  • ஊருடன் பகைக்கின் வேறுடன் கெடும்.

  • ஊருக்கு உபதேசமடி பெண்ணே, அது உனக்கில்லையடி கண்ணே.

  • ஊர் சனங்களுக்கு எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்று உபதேசிக்கும் ஒருவன், தன் மனைவி, மக்கள் அவன் ஊர் சனங்களுக்குச் சொன்னதற்கு நேரெதிராக, நடந்துக்கொண்டாலும் கண்டிக்காமல்/கண்டுக்கொள்ளாமல் இருந்துவிடும் இயல்பைக் குறித்துச் சொல்லப்படும் சொலவடை

  • ஊர் அறிந்த பிராமணனுக்கு பூணூல் எதற்கு?

  • ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடல்.

  • ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி.

  • ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.

  • ஊரான் வீட்டு நெய்யே, தன் பெண்டாட்டி கையே.

  • ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடேல்.

  • எங்கப்பன் குதுருக்குள்ள இல்ல.

  • எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய், உங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன தருவாய் ?

  • எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு.

  • எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?

  • எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.

  • எடுத்தாலும் பங்காரு பெட்டியை எடுக்க வேண்டும்; இருந்தாலும் சிங்கார கழுவில் இருக்க வேண்டும்!

  • எடுப்பார் கைப்பிள்ளையைப் போல இருக்காதே!

  • எட்டாத பழத்திற்கு கொட்டாவி விட்டானாம்..(விடாதே!)

  • எட்டிக்குப் பால் வார்த்து வளர்த்தாலும் தித்திப்பு உண்டாகாது.

  • எட்டி பழுத்தென்ன, ஈயார் வாழ்ந்தென்ன?

  • எட்டு வயசான எரும ஏரிக்கு வழி கேக்குதாம்.

  • எண் இல்லாதவர் கண் இல்லாதவர்.

  • எண்ணத் தொலையாது; ஏட்டில் அடங்காது!

  • எண்ணறக்கற்று எழுத்தறப் படித்தாலும், பெண்புத்தி பின்புத்திதான்!

  • எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.

  • எண் சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம்.

  • எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி.

  • எண்ணிச்செய்வது செட்டு, எண்ணாமல் செய்வது வேளாண்மை.

  • எண்ணெய் முந்துதோ திரி முந்துதோ?

  • எதார்த்தவாதி வெகுசன விரோதி.

  • எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.

  • எதிரிக்கு எதிரி நண்பன்.

  • எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்கவேண்டும்.

  • எத்தைத் தின்னால் பித்தம் தெளியும்? (சொலவடை)

  • எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?

  • எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம்.

  • எந்நிலத்து வித்திடுனும் காஞ்சிரங்காய் தெங்காகா

  • எய்தவன் இருக்க அம்பை நோவானேன் ?

  • எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.

  • எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம்.

  • எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே.

  • எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி?

  • எரியும் பந்தத்திற்கு எண்ணெய் வார்ப்பதைப்போல...

  • எருது நோய் காக்கைக்கு தெரியுமா?

  • எருது புண்ணு காக்கைக்குத் தெரியுமா?

  • எருமைமாட்டின் மீது மழை பெய்தாற் போல.

  • எலி அழுதால் பூனை விடுமா?

  • எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.

  • எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்

  • எலிக்கறி உடம்புக்கு நல்லதுன்னு பூனை சொல்லுச்சாம்.

  • எலி வளை யானாலும் தனி வளை வேண்டும்.

  • எலியைக் கொல்ல குடியிருக்கும் வீட்டிற்கே தீ வைத்தாற்போல..(வைத்துக்கொள்ளுவார்களா?)

  • எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா?

  • எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது

  • எல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் துக்குகிறவர் யார்?

  • எல்லாரும் கூடிக் குல்லாய் போட்டனர்!

  • எல்லாரும் தடுக்கின்கீழ் நுழைந்தால், இவள் கோலத்தின் கீழ் நுழைந்ததைப் போல்!

  • என்றைக்கும் இல்லாத திருநாளாக....(சொலவடை)

  • என்றும் செய்யாத, எதிர்பார்க்காத ஒரு காரியத்தை ஒருவர் செய்யும்பொது பயன்படுத்தும் சொலவடை...எ.கா.,என்றைக்கும் இல்லாத திருநாளாக அந்தப்பெரியவர் நம்வீடு தேடி வந்திருக்கிறார்...நம்மாலான உதவிகளைச் செய்வோம்!..

  • எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?

  • எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கொடுத்தான்

  • எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.

  • எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி.

  • எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.

  • எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்

  • எள் என்றால் எண்ணெயாக நிற்பான்/இருப்பான்!

  • கொடுக்கப்பட்ட வேலையை எதிர்பார்த்ததற்கும் மேலாக மிகச்சிறப்பாக செய்வான்/செய்யக்கூடியவன் என்றுப் பொருள்... நல்லெண்ணெய் தேவைப்படுபவன் எள்ளைப் பார்த்தவுடன் அது எண்ணெயாக மாறிவிட்டால் எப்படியோ, அப்படி எனக் கொள்ளவேண்டும்

  • எள் என்கிறதற்கு முன்னே எண்ணெய் கொண்டு வருகிறான்.

  • எள்ளுக்கு ஏழு உழவு , கொள்ளுக்கு ஓர் உழவு.

  • எளைச்சவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு.

  • எறும்பு ஊரக் கல்லுந் தேயும்.

  • எறும்புந் தன் கையால் எண் சாண்

  • எத்தைத் தின்னால் பித்தம் தெளியும்?

  • ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது.

  • ஏதென்று கேட்பாருமில்லை எடுத்துப் பிடிப்பாருமில்லை.

  • ஏமாந்தவன் தொடையில் திரித்தது லாபம்.

  • ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம்.

  • ஏரி நிறைந்தால் கரை கசியும்.

  • ஏரி மடை என்றால் நோனி மடை (என்கிறார்)

  • ஏரி மேல் கோபித்துக்கொண்டு குண்டி கழுவாமல் போனானாம்.

  • ஏருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.

  • ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை

  • ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்.

  • ஏழை என்றால் எவர்க்கும் எளிது.

  • ஏழைக்கு இரக்கப்பட்டா நாளைக்கு இருக்க மாட்டோம்.

  • ஏழைக்கேத்த எள்ளுருண்டை.

  • ஏழையின் சொல் அம்பலம் ஏறாது.

  • ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்.

  • ஏன் நாயேன்னா எட்டி மூக்க நக்குமாம்.

  • ஏற்றவன் குண்டிய எட்டனமுட்டும் தாங்கலாம்

  • ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகா தாம் பேய்ச்சுரைக்காய்க்கு.

  • ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா?

  • ஐந்து வயது வரை பிள்ளையைப் பேய் வளர்க்கும்.

  • ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது

  • ஐயர் வரவில்லை என்பதற்காக அமாவாசை நிற்குமா?

  • ஐப்பசி அடை மழை.

  • ஐயருக்கு எதுக்கு ஆட்டுக்குட்டி வெயாபாரம்.

  • ஐம்பதிலும் ஆசை வரும்

  • ஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள்.

  • ஒத்தை பிராமணனுக்கு முன்னும், இரட்டை வைசியனுக்கு முன்னும் போகாதே!

  • ஒரு வேலை செய்ய வெளியே போக முயலும்போது எதிரே ஒற்றை அந்தணரோ அல்லது இரண்டு வைசியர்களோ வந்தால் அது சகுனத்தடை...அந்தக் காரியம் நிறைவேறாது என்றுப் பொருள்.

  • ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ?

  • ஒரு காசு பேணின் இரு காசு தேறும்

  • ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை

  • ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி நஞ்சு.

  • ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?

  • ஒரு கை (அல்லது வெறுங்கை) முழம் போடுமா?

  • ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை

  • ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைக்கவா?

  • ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

  • ஒரு பொய்யை மறைக்க ஒன்பது சொல்லுதல்

  • ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்லுதல்.

  • ஒரு முறை உண்பவன் யோகி, இரு முறை உண்பவன் போகி, மும்முறை உண்பவன் ரோகி.

  • ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்.

  • ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்.

  • ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.

  • ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.

  • ஒற்றுமையே பலம்.

  • ஒருவனாய் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை.

  • ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று.

  • ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா!

  • ஒன்னே ஒன்னு, கண்ணே கண்ணு (என்று).......

  • ஒண்டவந்த பிடாரி ஊர்ப் பிடாரியை ஓட்டியதாம்.

  • ஓசை பெறும் வெண்கலம் ஓசை பெறா மட்கலம்.

  • ஒய்யாரக்கொண்டையாம் தாழம்பூவாம் அதனுள்ளே இருக்குமாம் ஈறும் பேனும்.

  • ஓங்கி அறைந்தால் ஏங்கி அழ சிவன் இல்லை.

  • ஓடி ஒரு கோடி தேடுவதிலும், இருந்து ஒரு காசு தேடுவது நலம்.

  • ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.

  • ஓடி வரும் பூனை ஆடி வரும் ஆனை.

  • ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.

  • ஓடுகிற ஓணானை இடுப்பில் கட்டிக்கொண்டு, குத்துதே குடையுதே என்றானாம்....

  • ஓட்டம் உள்ளவரை ஆட்டமும் அதிகம்!

  • ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.

  • ஓட்டை பானையிலும் சர்க்கரை இருக்கும்

  • ஓணான் வேலிக்கு இழுக்கிறது; தவளை தண்ணீருக்கு இழுக்கிறது!

  • ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.

  • ஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே.

  • ஓர் ஊருக்கு ஒரு வழியா? ஒன்பது வழி.

  • ஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு.

  • ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை.

  • கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆகுமா?

  • கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை.

  • கடலுக்குக் கரை போடுவார் உண்டா?

  • கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.

  • கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?

  • கடல் திடலாகும், திடல் கடலாகும்.

  • கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா?

  • கடல் வற்றினால் கருவாடு தின்னலாம் என்று உடல் வற்றி செத்ததாம் கொக்கு!

  • கடலாழம் கண்ட பெரியோர்க்கும் பெண்கள் மன ஆழம் காணலரிது!

  • கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.

  • கடன் இல்லா கஞ்சி கால் வயிறு.

  • கடன் வாங்கிக் கான் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கைவிட்டனும் கெட்டான்.

  • கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி.

  • கடன் பட்டார் நெஞ்சம் போல...

  • கத்தி எடுத்தவன் கத்தியாலேயே சாவான்.

  • கடமையைச் செய் பலனை எதிர்பாராதே.

  • கடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை.

  • கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.

  • கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?

  • கடுகு போன இடம் ஆராய்வார், பூசணிக்காய் போன இடம் தெரியாது.

  • கடுகு களவும் களவுதான், கற்பூரம் களவும் களவு தான்.

  • கடுங்காற்று மழை கூட்டும் கடுஞ் சிநேகம் பகை கூட்டும்.

  • கடுஞ் சொல் தயவைக் கெடுக்கும்.

  • கடை காத்தவனும் காடு காத்தவனும் பலன் அடைவான்.

  • கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பது போல.

  • கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறது.

  • கட்டக் கரிய இல்லாமற் போனாலும் பேர் பொன்னம்மாள்.

  • கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும்.

  • கட்டினவனுக்கு ஒரு வீடானால் கட்டாதவனுக்கு பல வீடு.

  • கட்டின வீட்டுக்கு எட்டு வக்கனை.

  • கணக்கன் கணக்கறிவான் தன் கணக்கைத் தான் அறியான்.

  • கணக்கன் கணக்கைத் தின்னாவிடில், கணக்கனை கணக்கு தின்று விடும்.

  • கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்.

  • கண் உள்ள போதே காட்சி; கரும்பு உள்ள போதே ஆலை!

  • கண் கண்டது கை செய்யும்.

  • கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா?

  • கண்டதே காட்சி கொண்டதே கோலம்.

  • கண்டது சொன்னால் கொண்டிடும் பகை.

  • கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு.

  • கண்டால் காமாட்சி, காணாவிட்டால் மீனாட்சி.

  • கண்டதைத் தின்றால் பலவான் ஆகலாம்.

  • கண்ணடிச்சு வராத பொம்பள கையப்படிச்சு இழுத்தா வரவா போறா?

  • கண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ?

  • கண்ணிற் பட்டால் கரிக்குமா, புருவத்திற் பட்டால் கரிக்குமா?

  • கண்ணிற் புண் வந்தால் கண்ணாடி பார்த்தல் ஆகாது.

  • கண்ணைக்கட்டி காட்டில் விட்டாற்போல!

  • கண்ணு சிறுசு, காண்பதெல்லாம் பெரிசு.

  • கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் , தீர விசாரிப்பதே மெய்.

  • கண்ணாடி வீட்டிலிருந்து கல் எறிந்தாற் போல

  • கத்தரிக்காய் சொத்தை என்றால் அரிவாள்மணை குற்றம் என்கிறாள்.

  • கத்தரிக்காய் முற்றினால் கடைத் தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும்.

  • கதிரவன் சிலரை காயேன் என்குமோ?

  • கந்தனுக்குப் புத்தி கவட்டுக்குள்ளே

  • கந்தையானாலும் கசக்கிக் கட்டு.

  • கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றா விடியும்.

  • கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே.

  • கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி.

  • கப்பற்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு.

  • கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்!

  • கம்பால் சாய்க்காதவனைக் கயிற்றால் சாய்த்த கதையாக.

  • கரணம் தப்பினால் மரணம்.

  • கரிவிற்ற பணம் கறுப்பாய் இருக்குமா?

  • கருப்பே அழகு காந்தலே ருசி!

  • கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான்.

  • கரும்பு கசக்கிறது வாய்க் குற்றம்

  • கரும்பு விரும்ப அது வேம்பாயிற்று.

  • கரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாம்?

  • கரும்பு தின்ன கூலி வேண்டுமா?

  • கருத்த பார்ப்பனனையும், வெளுத்த சூத்திரனையும் நம்பாதே !?

  • கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.

  • கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி!

  • கல்லென்றாலும் கணவன், புல்லென்றாலும் புருசன்.

  • கல்லடிச் சித்தன் போனவழி, காடுமேடெல்லாம் தவிடுபொடி.

  • கல்லாடம் [ ஒரு நூல்] படித்தவனோடு மல் ஆடாதே.

  • கல்லாதவரே கண்ணில்லாதவர்.

  • கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்.

  • கல்லடி பட்டாலும் கண்ணடி படாதே!!

  • கல்வி அழகே அழகு.

  • கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு.

  • கல்விக்கு இருவர், களவுக்கு ஒருவர்.

  • கல்யாணம் ஆயிரம் காலத்துப் பயிர்.

  • கவலை உடையோர்க்குக் கண்ணுறக்கம் வராது.

  • கழுவுகிற நீரில் நழுவுகிற மீன் போல.

  • கழுதை கெட்டால் குட்டிச் சுவர்.

  • கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை

  • கழுதைக்கு உபதேசம் காதில் ஓதினாலும் அபயக் குரலே குரல்.

  • களவுக்குப் போறவன் தும்பக் கூடாது, கடை வச்சவன் தூங்கக் கூடாது.

  • களவும் கற்று மர

( இது 'களவும் கத்தும் மற' என்பதன் திரிந்த பழமொழி)

  • களவும் கத்தும் மற

  • களவையும் சூதாட்டத்தையும் மறந்துவிடு என்பது பொருள்.

  • களை பிடுங்காப் பயிர் காற்பயிர்.

  • கள் குடித்த குரங்கு போல ...

  • கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.

  • கள்ள மனம் துள்ளும்.

  • கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியு மட்டும் திருடலாம்.

  • கள்ளம் பெரிதோ? காப்பு பெரிதோ!

  • கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்!

  • கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்லுவான்.

  • கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே.

  • கள்ளுக்கும் காமத்துக்கும் கண்ணில்லை!

  • கறையான் புற்று பாம்புக்கு உதவுகிறது.

  • கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.

  • கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு.

  • கன்றுக்குட்டிக்குத் தெரியுமா, கவணையுடைய உயரம்?

  • கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?

  • கனிந்த பழம் தானே விழும்.

  • கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.

  • கற்பில்லாத அழகு, வாசனை இல்லாத பூ.

  • கடமை கண் போன்றது

  • கல்யாணம் பண்ணி பார் வீட்டை கட்டி பார்

கா

  • காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும் அது காற்றைப் போல பறக்கவும் வேண்டும்.

  • காஞ்சிபுரம் போனா காலாட்டி சாப்டலாம்.

  • காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.

  • காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்.

  • காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்.

  • காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா?

  • காண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா?

  • காணி ஆசை கோடி கேடு.

  • காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம்

  • காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே.

  • காதோரம் நரைத்த முடி கதை முடிவை காட்டும்.

  • காகம் திட்டி மாடு சாகாது.

  • காகம் வழி காட்டினால் செத்த நாயிடம் சேர்க்கும்.

  • காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.

  • காக்காய் உட்கார பனம் பழம் விழுந்தாற் போல.

  • காகிதப்பூ மணக்காது.

  • காப்பு சொல்லும் கை மெலிவை.

  • காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.

  • காய்த்த மரம் கல் அடிபடும்.

  • காய்ந்தும் கெடுத்தது பெய்தும் கெடுத்தது.

  • காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் விழுந்த மாதிரி..

  • காரண குருவே காரிய குரு!

  • காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.

  • காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?

  • கார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை

  • காலம் பிழைத்தால் கறுத்தார் என்ன செய்ய முடியும் ?

  • காலமும் கடல் அலையும் எவருக்கும் காத்திரா.

  • காலம் செய்கிறது ஞாலம் செய்யாது.

  • காலம் பொன் போன்றது

  • காலம் போம் வார்த்தை நிற்கும், கப்பல் போம் துறை நிற்கும்

  • காலத்துக்கு ஏற்றபடி பெருச்சாளி காவடி எடுத்து ஆடிற்றாம்!

  • காலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம், நூலளவே ஆகுமாநுண்சீலை.

  • காலணாக் கொடுத்து அழச் சொன்னாளாம், நாலணாக் கொடுத்து ஓயச் சொன்னாளாம்.

  • காலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க உழைப்பும்.

  • காலைக் கல்; மாலைப் புல்.

  • ("காலை நேரத்தில் கல்லின் மேல் உட்காரலாம்; குளிர்ச்சியாக இருக்கும். மாலை நேரத்தில் கல்லின் மேல் உட்கார்ந்தால் சுடும். காலை நேரத்தில் புல்லின் மேல் உட்கார்ந்தால் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். மாலை நேரத்தில் புல்லின் மேல் அமர்ந்தால் இதமாக இருக்கும்" என்று சிலர் பொருள் கூறுவார்கள்; மாறாக, வேறு ஒரு பொருளும் கூறுவர். காலையில் கற்க வேண்டும். அப்போது மனம் அமைதியாக இருந்து கல்வியை ஏற்கத் தயாராக இருக்கும். காலை என்பது அதிகாலை 4 மணிக்கும் மேல்; அப்போது கற்கும் கல்வி கல்வெட்டு போல் மூளையில் பதியும். "இளமையில் கல்வி சிலைமேல் எழுத்து' என்பது கல்வி பற்றிய ஒரு பழமொழி. "மாலைப் புல்" என்பதற்கு, மாலை நேரம் இன்பத்தை அனுபவிப்பதற்கு ஏற்ற நேரம் என்று கூறுவர். (புல்-புல்லுதல்-இன்பம் அனுபவித்தல்). இது பவணந்தியார் என்ற இலக்கண ஆசிரியர் கருத்து. (காலைக் கல்; மாலைப் புல்!, தமிழ்மணி, 12 பிப் 2012)

  • காலை வெய்யில் காலன், மாலை வெய்யில் மருந்து.

  • காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்

  • காவலுக்கு பொம்மை இருக்கேன்னு நம்பி களம் நிறைய நெல்லு காய வச்சாங்களாம்!

  • காற்றில்லாமல் தூசி பறக்குமா?

  • காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.

  • காற்றுக்கு எதிர்லே துப்பினால் முகத்தில் விழும்.

  • காட்டுப் பூனைக்குச் சிவராத்திரி விரதமா?

கி

  • கிடந்த கிடைக்கு நடந்த நடை மேல்!

  • கிட்டாதாயின் வெட்டென மற

  • கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்.

  • கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்?

  • கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டுபோகாது.

கீ

  • கிரீடத்தை பிடிக்க, கிராமத்தை பிடி

  • கீர்த்தியால் பசி தீருமா?

  • கீறி ஆற்றினால் புண் ஆறும்.

  • கிரீடம் அரசனுக்கு மட்டுமே சொந்தம்.

கு

  • குங்குமம் சுமந்த கழுதை மணம் அறியுமா?

  • குசவனுக்கு ஆறுமாதம் தடிகாரனுக்கு அரை நாழிகை.

  • குஞ்சுக் கோழி ஆனாலும் குனிந்து அறுக்க வேண்டும்

  • குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.

  • குடி குடியக் கெடுக்கும்.

  • குடி, சூது, விபசாரம் குடியைக் கெடுக்கும்.

  • குடி வைத்த வீட்டிலே கொள்ளி வைக்கலாமா?

  • குடிகாரன் பேச்சு பொழுது விடிந்தால் போச்சு.

  • குட்டக்குட்ட குனியாதே..

  • குட்டி யானையும் குட்டயக் கலக்கும்.

  • குற்றமுள்ள நெஞ்சு குறுகுறு என்னும்.

  • குடும்பத்தில் இளையவனும் கூத்தாடியில் கோமாளியும் ஆகாது.

  • குட்டி செத்தா குடியா முழுகப்போகுது?

  • குட்டுப் பட்டாலும் மோதுகிற கையால் குட்டுப்படவேண்டும்.

  • குடியைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பு.

  • குண்டி கொள்ளாம கோவணம் கட்டுனாப்ல.

  • குணத்தை மாற்றக் குருவில்லை.

  • குணம் இல்லா வித்தை எல்லாம் அவித்தை.

  • குணம் பெரிதேயன்றிக் குலம் பெரியதன்று.

  • குதிரை இருப்பு அறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.

  • குதிரை ஏறாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.

  • குதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை.

  • குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.

  • குப்பை உயரும் கோபுரம் தாழும்.

  • குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?

  • கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கு.

  • குப்புறவிழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்றானாம்.

  • குமரி ஒற்றையில் போனாலும் கொட்டாவி ஒற்றையில் போகாது.

  • குரங்கின் கைப் பூமாலை.

  • குரங்கு கையில் பூமாலை கொடுத்தாற் போல....

  • குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணாங்குருவி கூண்டு இழந்தது.

  • குரங்கிடம் மூத்திரம் கேட்டால் அது கொப்புக்கு கொப்புத் தாவுமாம்.

  • குரங்கு சுன்னியை மருந்துக்கு கேட்டால் அது கொம்புக்கு கொம்புக்கு தாவுமாம்!

  • குரு இல்லார்க்கு வித்தையுமில்லை முதல் இல்லார்க்கு ஊதியமில்லை.

  • குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மையிட்டுமென்ன?

  • குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.

  • குருவிக்கேத்த ராமேஸ்வரம்.குரைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா?

    • இது 'குறி வைக்க ஏற்ற ராம சரம்' என்பதன் திரிந்த வழக்கு
  • குரைக்கிற நாய் கடிக்காது; கடிக்கிற நாய் குரைக்காது.

  • பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே

  • குலவித்தை கற்றுப் பாதி கல்லாமற் பாதி.

  • குல வழக்கம் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது.

  • குலத்தைக்கெடுக்கவந்த கோடாலிக்காம்புபோல

  • குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே.

  • குழந்தையை கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டிவிட்டாற் போல....

  • குறி வைக்க ஏற்ற ராம சரம்

  • குறைந்த வயிற்றிற்கு கொள்ளுமாம் பலாக்காய்

  • குறைகுடம் ததும்பும், நிறைகுடம் ததும்பாது.

  • குற்றமுள்ள நெஞ்சு குறுகுறு என்கும்.

  • குறும்பியுள்ள காது தினவு கொள்ளும்

  • குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.

  • குந்தித் தின்றால் குன்றும் மாளும்!

  • குனிய குனியத்தான் குட்டு விழும்.

  • குண்டுமணிக்குத் (குன்றிமணி) தெரியாதாம் தன் குண்டி கருப்பென்று.

  • கும்பி எரியுது, மீசைக்கு சம்பங்கி எண்ணெய்யா?

  • கும்பி கூழுக்கு அழுததாம், மீசை சம்பங்கி எண்ணெய் கேட்டதாம்.

  • கும்பிடபோன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி........

கூ

  • கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

  • கூத்தாடி கிழக்கே பார்த்தான் , கூலிக்காரன் மேற்கே பார்த்தான்.

  • கூத்தாடி பெண்ணுக்கு சூதாடி கணவன்

  • கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம்.

  • கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே?

  • கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குத் தேங்காய் கொண்டாட்டம்.

  • கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.

  • கூழும் சிந்தல, கோப்பையும் உடையல

  • கூழானாலும் குளித்துக் குடி.

  • கூலி கால் பணம், சுமை கூலி முக்கால் பணம்.

  • கூடாநட்பு கேட்டில் முடியும்.

  • கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போவானா ? (மயில் பிடிப்பானா?)

கெ

  • கெடுக்கினும் கல்வி கேடுபடாது

  • கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது

  • கெடுவான் கேடு நினைப்பான்

  • கெட்டாலும் செட்டி செட்டியே, கிழிந்தாலும் பட்டு பட்டே.

  • கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே, சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.

  • கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும்.

  • கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு.

  • கெட்டும் பட்டணம் சேர்

  • கெண்டையைப் போட்டு வராலை இழு.

  • கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான்.

  • கெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கல்ல.

கே

  • கேடு வரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே.

  • கெடுவான் கேடு நினைப்பான்.

  • கேட்டதெல்லாம் நம்பாதே! நம்பியதெல்லாம் சொல்லாதே!

  • கேட்பார் இல்லாவிட்டால் தம்பி சண்டபிரசண்டனாம்!

  • கேழ்வரகில் நெய் வடிகிறதென்றால் கேட்பவனுக்கு மதி வேண்டாவா?

  • கேழ்வரகில் நெய் வழிகிறது என்றால், கேட்பவனுக்கு மதி,சுதி எங்கே போனது?

  • கேளும் கிளையுங் கெட்டோர்க்கு இல்லை.

  • கேள்விப் பேச்சில் பாதிதான் நிசம்.

  • கேள்விப் பேச்சு மூளா நெருப்பு

கை

  • கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை/கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாததைப்போல

  • கைக்கோளனுக்குக் காற்புண்ணும் நாய்க்குத் தலைப்புண்ணும் ஆறா

  • கைத் துப்பைக் கொண்டு காரியம் இல்லை; வாய்த் துப்பைக் கொண்டு வாழ வந்தேன்

  • கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?

    • இது 'கைப்பூணுக்குக் கண்ணாடி வேண்டுமா?' என்பதன் திரிந்த வழக்கு
  • கைப்பூணுக்குக் கண்ணாடி வேண்டுமா?கைப்பொருளற்றால் கட்டினவளும் பாராள்

    • கையில் உள்ள பூண் அல்லது காப்பைப் பார்க்கக் கண்ணாடி தேவையில்லை
  • கையாளத ஆயுதம் துருப்பிடிக்கும்

  • கையிலே காசு வாயிலே தோசை

  • கையில் உண்டானால் காத்திருப்பார் ஆயிரம் பேர்.

  • கையூன்றிக் கரணம் போடவேண்டும்.

  • கையில் பிடிப்பது துளசி மாலை, கக்கத்தில் இடுக்குவது கன்னக்கோலாம்

கொ

  • கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?

  • கொஞ்சம் கொஞ்சமாக் குடைஞ்சா குடகு மலையையும் குடைஞ்சிடலாம்

  • கொடிக்கு காய் கனமா?

  • கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம்.

  • கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது.

  • கொடுங்கோலன் ஆட்சியிலே அம் என்றால் சிறை வாசம், உம் என்றால் வனவாசம்.

  • கொடுத்தைக் கேட்டால் அடுத்த தாம் பகை.

  • கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சியா?

  • கொண்டானும் கொடுத்தானும் ஒன்று,கலியாணத்தைக் கூட்டி வைத்தவன் வேறு.

  • கொண்டவன் சரியா இருந்தா கூரெ ஏறிக்கூட சண்டெ போடலாம்

  • கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சான்.

  • கொல்லன் தெருவில் ஊசி விலைபோமா?

  • கொல்லைக் காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?

  • கொழுத்தவனுக்கு கொள்ளு... இளைத்தவனுக்கு எள்ளு!

  • கொள்ளிக்கு எதிர்போனாலும், வெள்ளிக்கு எதிர்போகலாகாது.

  • கொள்ளும் வரைக்கும் கொண்டாட்டம் , கொண்ட பிறகு திண்டாட்டம் .

  • கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன்.

  • கொண்டுவந்தால் தந்தை, கொண்டுவந்தாலும் வராவிட்டாலும் தாய்,சீர் கொண்டுவந்தால் சகோதரி,கொலையும் செய்வாள் பத்தினி, உயிர் காப்பான் தோழன்.

  • கொன்றால் பாவம், தின்றால் போகும்.

  • கொசு அடிக்க கோடரி வேண்டுமா?

கோ

  • கோட் சொல்பவைக் கொடுந்தேள் என நினை.

  • கோட் சொல்லும் வாய் காற்றுடன் நெருப்பு.

  • கோடாலிக்காம்பு குலத்துக்கு ஈனம்

  • கோடி வித்தையும் கூழுக்குத்தான்

  • கோணிகோடி கொடுப்பதிலும் கோணாமற் காணி கொடுப்பது நல்லது.

  • கோத்திரமறிந்து பெண்ணைக்கொடு, பாத்திரமறிந்து பிச்சையிடு.

  • கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.

  • கோபம் சண்டாளம்.

  • கோபுரம் தாண்டுகிற குரங்குக்கு குட்டிச் சுவர் என்ன பிரமாதம்!

  • கோபுர தரிசனம் கோடி புண்ணியம்.

  • கோயிற் பூனை தேவர்க்கு அஞ்சுமா?

  • கோல் உயரக் குடி உயரும்.

  • கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா?

  • கோளுஞ் சொல்லி கும்பிடுவானேன்?

  • கோடானுகோடி கொடுப்பினும் தன்னுடைய நாக்கு கோடாமை கோடி பெறும்

  • கோடானுகோடி கொடுத்தாலும் நாவினால் தவறு சொல்லாதது கோடி பெறும்.

  • கோடி கொடுப்பினும் குடில் பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடி பெறும்.

  • கோழிக்கு வேலை கூவுறது, கொழுக்கட்டைக்கு வேலை வேகறது

  • கோயிலில்லா ஊரிலே குடியிருக்கலாகாது

  • கோவிலை கட்டிப்பார், குளத்தை வெட்டிப்பார்.

  • சங்கு ஆயிரம் கொண்டு வங்காளம் போனால், பொன்பாளம் வந்தாலும் வரும்; மண்பாளம் வந்தாலும் வரும்!

  • சண்டிக் குதிரை நொண்டிச் சாரதி

  • சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்?

சட்டியில் உணவோ அல்லது சாறோ இருந்தால்தானே அகப்பையில் வரும் என்று பொருளில் சொல்லப்பட்டாலும், உண்மையில் குழந்தைப்பேறு இல்லாதவர்கள் கந்தர் சஷ்டி விரதம் இருந்தால் அகப்பையான கர்ப்பப்பையில் குழந்தை வரும் என்று குறிப்பிட வழங்கப்பட்ட பழமொழி

  • சத்தியமே வெல்லும், அசத்தியம் கொல்லும்.

  • சனியைப்போல கொடுப்பவனுமில்லை, சனியைப்போல கெடுப்பவனுமில்லை!

  • சந்தியிலே அடித்ததற்குச் சாட்சியா?

  • சபையிலே நக்கீரன் அரசிலே விற்சேரன்.

  • சமத்தி சந்தைக்குப்போனாலாம் வட்டி கிண்ணியாச்சாம்.

  • சம்பளம் இல்லாத சேவகனும், கோபமில்லாத எசமானும் சருகைக் கண்டு தணலஞ்சுமா.

  • சர்க்கரை என்றால் தித்திக்குமா?

சா

  • சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் அளவு.

  • சாகிறவரைக்குவஞ் சங்கடமானால் வாழுகிறது எக்காலம்?

  • சாகிறவரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்.

  • சாட்சிக்காரன் காலில் விழுவதிலும் சண்டைக்காரன் காலில் விழலாம்.

  • சாட்டை இல்லாப் பம்பரம் ஆட்டிவைக்க வல்லவன்.

  • சாது மிரண்டால் காடு கொள்ளாது.

  • சாத்திரம் பாராத வீடும் சமுத்திரம் பார்த்த வீடும் தரித்திரம்.

  • சாத்திரம் பொய் என்றால் கிரகணத்தைப் பார்.

  • சாப்பிள்ளை பெற்றாலும் மருத்துவச்சிக் கூலி தப்பாது.

  • சாகத்துணிந்தவனுக்கு வெள்ளம் தலை மேல் சாண் பொனாலென்ன? முழம் போனாலென்ன?

  • சாண் பிள்ளையானாலும்,ஆண் பிள்ளை.

  • சாண் ஏற முழம் சறுக்குகிறது.

சி

  • சிங்காரக்கொண்டையாம் தாழம்பூவாம் அதனுள்ளே இருக்குமாம் ஈறும் பேனும்.

  • சித்தன் போக்கே சிவன் போக்கு.

  • சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்.

  • சித்திரை மாதத்து உழவு... பத்தரை மாற்றுத் தங்கம்

  • சித்திரையில் செல்வ மழை.

  • சின்ன மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடி.

  • சின்ன நாய எறண்டுவானேன் செருப்படி வாங்குவானேன்.

  • சிரிக்கிற பெண்ணையும், அழுகிற ஆணையும் நம்பாதே!

  • சிரைத்தாலும் தலையெழுத்து அழியாது/போகாது!

  • சிவபூசையில் கரடி புகுந்தாற் போல!

  • சிறியோரெல்லாம் சிறியோரல்ல, பெரியோரெல்லாம் பெரியோருமல்ல.

  • சிறுதுளி பெரு வெள்ளம்.

  • சிறுதுரும்பும் பல் குத்த உதவும்.

  • சிறுக சேர்த்து (கட்டி) பெருக வாழ்.

சு

  • சுக துக்கம் சுழல் சக்கரம்.

  • சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை,சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை!

  • சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்.

  • சுட்ட சட்டி அறியுமா சுவை.

  • சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டுமா?

  • சுண்டைக்காய் காற்பணம் சுமை கூலி முக்காற்பணம்.

  • சுத்தம் சோறு போடும் எச்சில் இரக்க வைக்கும்.

  • சுத்த வீரனுக்கு உயிர் துரும்பு.

  • சும்மா வந்த மாட்டை பல்லைப் பிடித்தப் பாராதே

  • சும்மா கொடுத்த மாட்டை பல்லை பிடித்து பதம் பார்த்தானாம்.

  • சும்மா இருக்கிற தம்பிரானுக்கு இரண்டு பட்டை.

  • சும்மா கிடக்கிற சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி. (சும்மா கிடக்குற சங்க ஊதி கெடுத்தானாம் பண்டாரி)

  • சும்மா மெல்லும் வாய்க்கு அவல் கிடைத்தாற் போல.......

  • சுயபுத்தி போனாலும் சொற்புத்தி வேண்டாமா?

  • சுவர் இருந்தாதானெ சித்திரம் வரெய முடியும்.

  • சுவரை வைத்துதான் சித்திரம் வரையவேண்டும்.

சூ

  • சுவாமி வரங் கொடுத்தாலும் பூசாரி இடங்கொடுக்க மாட்டான்.(வரம் கொடுக்க மாட்டான்)

  • சூடு கண்ட பூனை அடுப்படிக்கு செல்லாது.

  • சூடு மண்ட பூனை பாலை குடிக்காது.

  • சூதும் வாதும் வேதனை செய்யும்.

செ

  • செக்களவு பொன்னிருந்தாலும் செதுக்கியுண்டால் எத்தனை நாளுக்குக் காணும்.?

  • செடியிலே வணங்காததா மரத்திலே வணங்கும்?

  • செட்டி மிடுக்கோ சரக்கு மிடுக்கோ?

  • செட்டியார் வாழ்வு செத்தால் தெரியும்.

  • செத்தவன் உடைமை இருந்தவனுக்கு அடைக்கலம்.

  • செத்த அன்றைக்கு வா என்றால் பத்து அன்றைக்கு வந்தானாம்.

  • செத்தும் கொடுத்தான் சீதக்காதி.

  • செய்வன திருந்தச் செய்.

  • செருப்பின் அருமை வெயிலில் தெரியும், நெருப்பின் அருமை குளிரில் தெரியும்.

  • செருப்புக்காகக் காலைத் தறிக்கிறதா?

  • செருப்புக்கேற்றபடி காலை வெட்டுவரா?

  • செல்லமுத்துன வாழக்காய் புளியில்லாம அவிஞ்சுச்சாம்.

  • செல்லுமிடம் சினம் காக்க.

  • செலவில்லாச் செலவு வந்தால் களவில்லாக் களவு வரும்.

  • சென்ற இடம் எல்லாம் சிறப்பே கல்வி.

  • செவிடன் காதில் சங்கு ஊதினால் போல!

  • செய்தவன் மனம் குன்றினால் ஐவினைப் பயனும் கெடும்.

  • செய்யும் தொழிலே தெய்வம்.

  • சேராத இடத்திலே சேர்ந்தால் துன்பம் வரும்.

சே

  • சேலையில் முள் விழுந்தாலும் முள்ளில் சேலை விழுந்தாலும் சேதம் சேலைக்குத்தான்.

  • சேலை கட்டிய மாதரை நம்பாதே !

  • சேற்றிலே புதைந்த யானையைக் காக்கையுங் கொத்தும்.

  • சேற்றிலே செந்தாமரை போல.

சை

  • சைகை அறியாதவன் சற்றும் அறியான்.

சொ

  • சொந்தக் காசில் சூனியம் வெச்சிக்கறது போல.

  • தவறு என்று நன்குத் தெரிந்தாலும், தனக்கு தனிப்பட்ட உபயோகம் ஒன்றுமில்லை என்றுத் தெரிந்தும் ஒரு காரியத்தைச் செய்ய முற்பட்டு தேவையற்ற/வீணான ஆபத்து, வம்பு தும்பு, சண்டை, சச்சரவு அகியவைகளில் சிக்கித் தவிப்பதைக் குறிக்கும் பழமொழி...

  • சொத்து பெரிசில்ல சொல்லுதான் பெரிசு

  • சொப்பனங் கண்ட அரிசி சோற்றுக்காகுமா?

  • சொல் அம்போ வில் அம்போ?

  • சொல்லாது பிறவாது அள்ளாது குறையாது.

  • சொல்லாமற் செய்வார் நல்லோர் சொல்லியுஞ் செய்யார் கசடர்.

  • சொல்லிப் போகவேணும் சுகத்திற்கு, சொல்லாமற் போகவேணும் துக்கத்திற்கு.

  • சொல்லுகிறவனுக்கு வாய்ச்சொல் , செய்கிறவனுக்கு தலைச்சுமை.

  • சொல்வல்லவனை வெல்லல் அரிது.

  • சொறிந்து தேய்க்காத எண்ணெயும் பரிந்து இடாத சோறும் பாழ்.

  • சொற்கோளாப் பிள்ளையினால் குலத்துக்கீனம்.

  • சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை.

சோ

  • சோம்பலே சோறு இன்மைக்குப் பிதா.

  • சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடே..

  • சோறு கண்ட எடம் சொர்க்கம் திண்ண கண்ட எடம் தூக்கம்.

  • சோற்றுக்குக் கேடு பூமிக்குப் பாரம்.

  • சோழியன் குடுமி சும்மா ஆடாது!

  • தங்க ஊசி என்பதற்காக கண்ணைக் குத்திக்கொள்வரா?

  • தங்கம் தரையிலே தவிடு பானையிலே.

  • தங்கக்குடத்திற்கு சந்தனமென்ன? பொட்டென்ன?

  • ஏற்கனவே மிகச்சிறந்த விடயங்களுக்கு, அலங்காரம் தேவையில்லை என்னும் பொருள்...

  • தஞ்சம் என்று வந்தவனை வஞ்சித்தல் ஆகாது.

  • தடி எடுத்தவன் தண்டல்காரனா ?

  • தட்டத் தட்ட தட்டான், படிக்க படிக்க வாத்தியாரு.

  • தட்டானுக்குப் பயந்தல்லவோ பரமசிவனும் அணிந்தான் சர்ப்பத்தையே.

  • தட்டாரத் தம்பியிலும் நல்ல தம்பி உண்டோ ?

  • தட்டிப்பேச ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்.

  • தணிந்த வில்லுத்தான் தைக்கும்.

  • தண்ணீரிலே விளைந்த உப்புத் தண்ணீரிலே கரைய வேண்டும்.

  • தண்ணீரையும் தாயையும் பழிக்காதே.

  • தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும் .

  • தந்தை எவ்வழி புதல்வன் அவ்வழி.

  • தந்தையோடு கல்விபோம்; தாயோடு அறுசுவை உண்டிபோம்.(பெற்றோர் தரும் கல்வியும், உணவுமே சிறந்தவை)

  • தந்தை சொல் மிக்கதொரு மந்திரமில்லை. (அப்பா கூறும் அறிவுரைகளே, அறங்களில் உயர்ந்தவை ஆகும்.)

  • தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.

  • தரித்திரனுக்கு பவிசு (வாழ்வு) வந்தால் அர்த்த இராத்திரியில் குடை பிடிப்பான்.

  • தருமம் தலைகாக்கும்.

  • தலை இடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்.

  • தலை இருக்க வால் ஆடலாமா ?

  • தலையைப் பார்த்து கல்லைப் போடு!

  • கல் என்பது தோசைக்கல்லைக் குறிக்கும்..தலை என்பது ஆள்/நபர்...சாப்பிட ஆள் இருந்தால் மட்டுமே கல்லைப் போட்டு தோசை சுடு அதாவது தேவை/அவசியம் இல்லாமல் செலவு செய்யாதே என்னும் பொருள்...

  • தலைக்கு மேல் வெள்ளம் சாண் ஓடி என்ன, முழம் ஓடி என்ன ?

  • தலை எழுத்தை தந்திரத்தால் வெல்லலாமா?

  • தலெ எழுத்து தலெய செரச்சா போவுமா?

  • தலை தப்பியது, தம்பிரான் புண்ணியம்!

  • தலையாரியும் அதிகாரியும் ஒன்றானால் சம்மதித்தபடி திருடலாம்.

  • தலைக்கு மிஞ்சினால்தான் தானமும், தருமமும்.

  • தலைவலி போய் திருகுவலி வந்ததாம்!

  • ஒரு பிரச்சினையை மிகுந்த சிரமப்பட்டு போக்கிக்கொள்ளும்போது நம்மை அறியாமலேலே மற்றொரு பெரிய பிரச்சினையை எதிர்கொள்ளவேண்டிய சூழ்நிலை வரும்போது பயன்படுத்தப்படும் பழமொழி...ஒரு பிரச்சினையை வெகு எச்சரிக்கையாக பின்/எதிர் விளைவுகளை யோசித்துக் கையாளவேண்டும் என்பதை உணர்த்தும்...

  • தனக்கு மிஞ்சியது தான் தானமும் தருமமும்.

  • தவத்துக்கு ஒருவர் கல்விக்கு இருவர்.

  • தவளை தன் வாயாற் கெடும்.

  • தவிட்டுக்கு வந்த கை தங்கத்துக்கும் வரும்

  • தன் பலம் கண்டு அம்பலம் ஏற வேண்டும்!

  • தன் வினை தன்னைச் சுடும் !

  • தன்னூர் கிழக்கே, தங்கினவூர் மேற்கே, வேண்டாம் தெற்கும், வடக்கும்.

  • ஒருவர் தூங்கும்போது எந்தத் திசையில் தலையை வைத்துத் தூங்கவேண்டும் என்பதைக் குறிப்பிடுகிறது...

  • தலகாணி மந்திரம் குடியைக் கெடுக்கும்.

  • தனக்கு தனக்கு என்றால் புடுக்கும் களை வெட்டுமாம்!!

  • தனக்கு தவிடு இடிக்க மாட்டான், வூருக்கு இரும்பிடிப்பான்.

  • தனக்கு வந்தால்தான் தெரியும் தலைவலியும், திருகுவலியும்.

  • தன் நாற்றமும் பெண்டாட்டி நாற்றமும் தெரியாது!

  • தன்னைக் கொல்ல வந்த பசுவையும் கொல்(லு)!

  • தாயில் சிறந்த கோயில் இல்லை.

தா

  • தாட்சண்யம் தன நாசம்.

  • தாண்டி குதிக்குமாம் மீனு. தயாரா இருக்குமாம் எண்ணெய் சட்டி!

  • தாயும், மகளுமே யானாலும் வாயும் வயிறும் வேறு, வேறுதான்!

  • என்னதான் நெருக்கமாகவும், அன்னியோன்னியமாகவும் இருந்தாலும் அவரவர் தேவைகள் வேறுவேறானவை/ மாறுபட்டவை...ஒருவர் தன்பசிக்கு உணவு உண்டால் மற்றவர் வயிறு நிறைந்து அவர் பசி அடங்காது என்றுப்பொருள்...

  • தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்.

  • தாய்க்குப்பின் தாரம்.

  • தாய்வீடு ஓடிய பெண்ணும் பேயோடு ஓடிய கூத்தும் ஒன்று.

  • தாயில்லா தகப்பன் தாயாதி.

  • தாயை இழந்த பிள்ளைகளுக்கு தகப்பன் இருந்தும் பயனில்லை...அவன் பட்டும் படாமலிருக்கும் தாயாதிகளைப் போன்றவனே!...ஒரு தாயைப்போல ஊணூட்டி, தேவைகளைக் கவனித்து நிறைவேற்றி, அவர்கள்பால் அம்மாவைப்போல அக்கறையும், அன்பும், ஆதரவும், கவனமும் கொண்டவனாக இருக்கமாட்டான் என்பதே இப்பழமொழி சொல்லும் உண்மையாகும்

  • தாயிற் சிறந்ததோர் கோவிலுமில்லை. (அம்மாவை விட, சிறந்த தெய்வம் எங்கும் இல்லை)

  • தாயைப் பார்த்து பெண்ணை கொள்.

  • தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை.

  • தாயோடு அறுசுவை உணவு போம்.

  • தார் புறப்பட்டு தாய் வாழைய கெடுத்தாப்ல.

  • தாராளம் தண்ணி பட்டபாடு நீராரம் நெய் பட்டபாடு.

  • தாழ்ந்து நின்றார் வாழ்ந்து நிற்பார்.

  • தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்.

  • தான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும்.

  • தான் சாகணும் சுடுகாடு பார்க்கணும்.

  • தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் என்பான்!

  • தன் வூட்டு நெருப்புன்னு முத்தம் கொடுக்க முடியுமா?

  • தானத்தில் சிறந்தது நிதானம்.

  • தானா பழுக்குறத தடி கொண்து அடிக்கணுமா?

  • தானே கனியாதக் காயைத் தடிக்கொண்டு அடித்தாலா கனியும்?

  • தானம் கொடுத்த மாட்ட பல்லப்புடுச்சு பதம் பாத்த கதெயா.

  • தானிருக்கும் அழகுக்குத் தடவிக்கொண்டாளாம் வேப்பெண்ணெய்.

தி

  • திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை

  • திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்!

  • திருவாரூரு தேவடியாள் தேர்ந்த கைக்காரி, பாலில்லாம புள்ளை வளர்ப்பாள் பலே கைக்காரி!

  • திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு (சேர்)

  • திருப்பதியில் மொட்டையனைத் தேடினாற்போல....

  • திருடனுக்கு தேள் கொட்டினாற் போல...

  • திருடனுக்கு இருட்டு உதவுவதைப் போல...

  • திண்ணைத்தூங்கி முண்டத்துக்கு பன்னீர்கண்ட மீசையாம்!

  • தில்லிக்கு ராஜாவானாலும் தாய்க்கு பிள்ளைதான்.

  • தின்ன மனசு தேடுமாம், உண்ண உடம்பு உருகுமாம்.

  • தேளுக்கு இடம் கொடுத்தால் நொடிக்கு நொடி கொட்டுமாம்!..

  • தேளுக்கு மானியம் கொடுத்தா நொடிக்கு நூறுதடவ கொட்டுமாம்.

தீ

  • தீட்டிய மரத்திலேயே கூர் பார்ப்பதைப்போல!

  • தீதும் நண்றும் பிறர் தற வாரா

து

  • துடைப்பக் கட்டைக்குப் பட்டுக் குஞ்சமா?

  • துட்டு வந்து பொட்டியிலே விழுந்ததோ , திட்டு வந்து பொட்டியிலே விழுந்ததோ?

  • துட்டனைக் கண்டால் தூர விலகு...

  • துணிகிறவருக்கு வெட்கம் இல்லை; அழுகிறவருக்கு துக்கம் இல்லை.

  • துணியாதே , படபடப்பாகச் செய்யாதே.

  • துரும்பும் பல் குத்த உதவும்.

  • துறவிக்கு வேந்தனும் துரும்பு.

தூ

  • தூண்டிக்காரனுக்கு தக்க மேல கண்ணு.

  • தூய மனதை திடுக்கிட வைத்தால் ஐயம் இல்லாமல் அனைத்தும் வரும்.

தெ

  • தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டுமா? (கட்டியதாம்)

  • தெரியாத தேவதைக்கு தெரிந்த பிசாசே மேல்

தே

  • தேங்கா தின்னது ஒருத்தன் தெண்டங் கட்டனது ஒருத்தன்.

  • தேன் எடுத்தவன் புறங்கையை நக்குவான்.

  • தேனெடுக்றது ஒருத்தன் பொறங்கைய நக்றது ஒருத்தன்.

  • தேளுக்கு கொடுக்கில் விஷம் தேவடியாளுக்கு உடம்பு பூராவும் விஷம்,

தை

  • தை பிறந்தால் வழி பிறக்கும்.

  • தை மாதம் தரையும் குளிரும்.

  • தை மாதம் போட்ட விதை தண்ணீரில்லாமல் வளரும்.

தொ

  • தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்.

தோ

  • தோடு தொலஞ்சா தேடமாட்டங்க, சொரை தொலைஞ்சா தேடுவாங்க.

  • தோண்டக்குறுணி துக்க முக்குறுணி.

  • நகத்தாலே கிள்ளுகிறதைக் கோடாரி கொண்டு வெட்டுகிறான்.

  • நக்குமங்கலம் நக்கி நாறமங்கலம் குடி போனாளாம்..

  • நடக்க அறியாதவனுக்கு நடுவீதி காத வழி.

  • நடந்தவன் காலிலே சீதேவி, இருந்தவன் காலிலே மூதேவி

  • நடந்தால் நாடும் உறவாகும், படுத்தால் பாயும் பகையாகும்.

  • நடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் பாயும் பகை.

  • நட்டுவன் பிள்ளைக்குக் கொட்டிக் காட்ட வேண்டுமா !

  • நண்டு கொழுத்தால் வளையில் இராது, தண்டு கொழுத்தால் தரையில் இராது.

  • நத்தையின் வயிற்றிலும் முத்துப் பிறக்கும்.

  • நம்ம ஊட்டு வெளக்குன்னு முத்தம் கொடுக்க முடியுமா?

  • நம்புறவனுக்கு மகராசா நம்பாதவனுக்கு எமராசா.

  • நமக்கு ஆகாததது நஞ்சோடு ஒக்கும்.

  • நமனுக்கு நாலு பிள்ளை கொடுத்தாலும் உற்றாருக்கு ஒரு பிள்ளை கொடுக்கமாட்டான்.

  • நமன் அறியாத உயிரும் நாரை அறியாத குளமும் உண்டோ?

  • நமைச்சல் எடுத்தவன்தான் சொரிந்துக்கொள்ள வேண்டும்!

  • நயத்திலாகிறது பயத்திலாகாது.

  • நரம்பில்லாத நாக்கு நாலும் பேசும்.

  • நரிக்கு இடங்கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்டும்.

  • நரி எடம் போனா என்ன வலம் போனா என்ன நம்ம மெலெ விழுந்து புடுங்காம இருந்தா சரி.

  • நரிக்கு கொண்டாட்டம் நண்டுக்குத் திண்டாட்டம்.

  • நரை திரை இல்லை, நமனும் அங்கில்லை.

  • நல் இணக்க மல்லது அல்லற் படுத்தும்.

  • நல்லது செய்து நடுவழியே போனால், பொல்லாதது போகிற வழியே போகிறது.

  • நல்ல வேளையில் நாழிப்பால் கறவாதது கன்று செத்துக் கலப் பால் கறக்குமா ?

  • நல்லவன் என்று பெயர் எடுக்க நெடுநாட் செல்லும்.

  • நல்லவன் ஒரு நாள் நடுவே நின்றால் அறாத வழக்கும் அறும்.

  • நல்லவனா கெட்டவனா என்பது செத்தால்தான் தெரியும்.

  • நல்லா கீது உந்நாயம், மண்டைலகீது காயம்.

  • நல்லார் பொல்லாரை நடக்தையால் அறியலாம்.

  • நல்ல மாட்டுக்கு ஒரு அடி, நல்ல மனிதனுக்கு ஒரு சொல்(லு).

  • நல்ல மாட்டிற்கு ஒரு சூடு, நல்ல மனிதனுக்கு ஒரு வார்த்தை.

  • நதி மூலமும் ரிஷி மூலமும் ஆராயாதே.

  • நம்பினார் கெடுவதில்லை ஆண்டவனை.

  • நன்மை கடைபிடி.

நா

  • நா அசைய நாடு அசையும்.

  • நாக்க தாண்டினா நரகல்.

  • நாக்கிலே இருக்கிறது நன்மையும் தீமையும்.

  • நாடறிந்த பார்ப்பானுக்கு பூணூல் அவசியமா ?

  • நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும்.

  • நாயைக் கண்டால் கல்லை காணோம், கல்லைக் கண்டால் நாயை காணோம்.

  • நாய் இருக்கிற சண்டை உண்டு.

  • நாய்க்கு வேலையில்லை நிற்க நேரமும் இல்லை.

  • நாய் விற்ற காசு குரைக்குமா?

  • நாய ஏவுனா அது தான் வாலை ஏவுது.

  • நாவால் பிறக்கும் நன்மையும் தீமையும்.

  • நாலாயிரம் இல்லையெனில் நம் பெருமான் இல்லை.

  • வைணவச் சமயத்தினருக்கு நாலாயிர திவ்விய பிரபந்தம் என்னும் நூல் எவ்வளவு புனிதமான, முக்கியமான நூல் என்பதைத் தெரிவிக்கும் மொழி...நம்பெருமான் என்பது திருவரங்கத்தில் கோவில்கொண்டுள்ள, வைணவக்கடவுளான அரங்கனாதனைக் குறிக்கும்...திருவரங்கத்து அரங்கனாதனின் கோவிலே, வைணவர்களின் எல்லாக் கோயில்களிலும் முதலாவதாகும்...

  • நாலாறு கூடினால் பாலாறு.

  • நாளுக்குநாளு நகர்ந்ததடி அம்மா (டி). சொலவடை

  • நாள் செய்வது நல்லார் செய்யார்.

  • நரம்பில்லா நாக்கு நாலும் பேசும்.

  • நாரதர் கலகம் நன்மையில் முடியும்.

  • நாற்பது வயதுக்குமேல் நாய் குணம்.

  • நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி.

  • நாலு பேர் கூடற எடத்துல நல்ல வெளக்கு, விடிய விடிய இலுப்ப வெளக்கு.

  • நாமொன்று நினைக்க தெய்வமொன்று நினைக்கும்.

  • நாதியற்ற கோவிலுக்கு நீதியற்ற பூசாரி.

  • நான்கு பிள்ளை பெற்றவருக்கு நடுத்தெருவில் சோறு, ஒரு பிள்ளை பெற்றவருக்கு உறியில் சோறு.

நி

  • நித்தம் போனால் முத்தம் சலிக்கும்.

  • நித்திய கண்டம் பூரண ஆயுசு.

  • நித்தியங் கிடைக்குமா அமாவாசை சோறு?

  • நித்திரை சுகம் அறியாது.

  • நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும்.

  • நிழலின் அருமை வெயிலிற் போனால் தெரியும்.

  • நிறை குடம் நீர் ததும்பாது. குறைகுடம் கூத்தாடும்.

  • நின்ற வரையில் நெடுஞ் சுவர், விழுந்த அன்று குட்டிச்சுவர்.

நீ

  • நீ எதனால் அளக்கின்றாயோ அதனால் நீ அளக்கப்படுவாய்!

  • நீந்த மாட்டாதவனை ஆறுகொண்டு போம்.

  • நீர் ஆழம் கண்டாலும் நெஞ்சு ஆழம் காண முடியாது.

  • நீர் உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும்.

  • நீர் மேல் எழுத்து போல்.

  • நீரடிச்சு நீர் வெலகுமா?

  • நீரானாலும் மோர், பேயானாலும் தாய்.

  • நீரில்லா நெற்றி பாழ்.

  • நீலிக்குக் கண்ணீர் இமையிலே.

  • நீள நீளத் தெரியும் மெய்யும் பொய்யும்.

நு

  • நுங்கு குடிச்சவன் ஓடிப்பொயிட்டானாம், குதம்பைய கடிச்சவன் மாட்டிக்கிட்டானாம்.

  • நுனிக்கொம்பில் ஏறி அடிக்கொம்பு வெட்டுவார்களா?

  • நுணலும் தன் வாயால் கெடும்.

நூ

  • நூல் கற்றவனே மேலவன்.

  • நூலளவே யாகுமாம் நுண்ணறிவு.

  • நூற்றுக் மேல் ஊற்று, ஆயிரத்துக்கு மேல் ஆற்றுப் பெருக்கு.

  • நூற்றைக் கொடுத்தது குறுணி.

நெ

  • நெய் முந்தியோ திரி முந்தியோ.

  • நெய்யை உருக்கியுண், நீரைச்சுருக்கியுண், மோரைப்பெருக்கியுண்.

  • நெய்யை உருக்கு, தயிரை பெருக்கு, உண்டியை சுருக்கு.

  • நெருப்பின்மீது ஈ மொய்க்குமா?

  • நெருப்பில்லாமல் புகையாது!

  • நெருப்பில்லாம பொகயுமா?

  • நெருப்பு இல்லாமல் நீள் புகை எழும்புமா?

  • நெருப்பு என்றால் வாய்வெந்து போமா?

  • நெருப்புப் பந்திலிலே மெழுகுப் பதுமை ஆடுமோ?

  • நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் பாயும்.

  • நேற்று உள்ளார் இன்று இல்லை.

நை

  • நைடதம் புலவர்க்கு ஒளடதம்.

நொ

  • நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு.

  • நொறுங்கத் தின்றால் நூறு வயது.

நோ

  • நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

  • நோய் கொண்டார் பேய் கொண்டார்.

  • நோய்க்கு இடம் கொடேல்.

  • பகைவர் பகலில் பக்கம் பார்த்துப் பேசு இரவில் அதுதானும் பேசாதே.

  • பகுத்தறியாமல் உறவு புகை எழு நெருப்பு.

  • பக்கச் சொல் பதினாயிரம்.

  • பசியுள்ளவன் ருசி அறியான்.

  • பசி வந்திடில் பத்தும் பறந்துபோம்

  • பசித்தபின் புசி.

  • பசுவிலும் ஏழை இல்லை பார்ப்பாரிலும் ஏழையில்லை.

  • பச்சை மண்ணும் சுட்டமண்ணும் ஒட்டுமா?

  • பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ?

  • படிப்பது திருவாசகம் இடிப்பது சிவன் கோவில்.

  • படிக்கிறது திருவாய் மொழி இடிக்கிறது பெருமாள் கோயில்.

  • படிப்பது பாகவதம், இடிப்பது பெருமாள் கோயில்.

  • தன் சொல்லுக்கும், செயலுக்கும் சம்பந்தமில்லாமல் செயல்படுவோரைக் குறித்துச் சொல்லப்படுவது...எப்படி வைணவர்களுக்குப் புனித நூலான பாகவதத்தைப் போற்றிப் படிப்பவர், அதே வைணவக்கோவிலை (பெருமாள்) இடித்து அழிக்க முற்படுவதைப்போல என்னும் பொருளில் பயனாகிறது...

  • படிக்குற வரைக்கும் புள்ள பயிறு பயிறுன்னாச்சாம்; படிச்சபெறவு பசறு பசறுன்னுச்சாம்.

  • படைக்கும் ஒருவன் கொடைக்கும் ஒருவன்.

  • படையிருந்தால் அரணில்லை.

  • படை முகத்திலும் அறிமுகம் வேண்டும்.

  • பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும். (Misery loves company)

  • பட்டவருக்கு பலன் உண்டு; பதவியும் உண்டு!

  • பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும்.

  • பட்டால் தெரியும் பட்ட வலி.

  • பட்டா உன்பேரில் சாகுபடி என்பேரில்.

  • பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்கு விலை சொல்லுகின்றாய்.

  • பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டா, கொட்டைப் பாக்கு என்ன வெலைங்றான்.

  • பட்டும் பட்டாடையும் பெட்டியிலிருக்கும், காற்காசு கந்தையில் ஓடி உலாவும்.

  • பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை முறைத்தாற் போல.

  • பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துப்பேர்.

  • பணத்தைப் பார்க்கிறதா பழைமையைப் பார்க்கிறதா?

  • பணம் என்ன செய்யும் பத்தும் செய்யும்.

  • பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துபேர்.

  • பணம் உண்டானால் மணம் உண்டு.

  • பணம் பந்தியிலே குணம் குப்பையிலே.

  • பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்.

  • பணம் பாதாளம் மட்டும் பாயும்.

  • பண்ணப் பண்ணப் பலவிதம் ஆகும்

  • பண்ணிய பயிரிலே புண்ணியம் தெரியும்.

  • பண்டிதன் மகன் பரம சூனியம்.

  • பண்டம் ஒரிடம் பழி பத்திடம்.

  • பதறாத காரியம் சிதறாது.

  • பதறிய காரியம் சிதறும் (Haste is waste)

  • பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்.

  • பந்திக்கில்லாத வாழைக்காய் பந்தலிலே கட்டித் தொங்குகிறது.

  • பந்திக்கு முந்தி,படைக்கு பிந்தி

  • பல்லு போனா சொல்லு போச்சு.

  • பத்துப்பேருக்குப் பல்குச்சி ஒருவனுக்குத் தலைச்சுமை.

  • பரட்டை பால் வார்க்கும், சுருட்டை சோறு போடும்.

  • பரணியிலே பிறந்தால் தரணி ஆளலாம்.

  • பரிசாரகன் நம்மாள் ஆனால், எங்கு உட்கார்ந்தால் என்ன?

  • பருத்திக்கு உழும் முன்னே தம்பிக்கு எட்டு முழம்.

  • பலநாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான்.

  • பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான்.

  • பலநாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்.

  • பல்லக்கு ஏற யோகம் உண்டு உன்னி ஏறச் சீவன் இல்லை.

  • பழகப் பழகப் பாலும் புளிக்கும். (Familiarity breeds contempt)

  • பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம்.

  • பழுத்த ஒலையைப் பார்த்துக் குருத்தோலை சிரிக்கிறதாம்.

  • பழுத்த பழம் கொம்பிலே நிற்குமா?

  • பழம் பழுத்தால் , கொம்பிலே தங்காது.

  • பழுத்த மரம்தான் கல்லடி படும்.

  • பழம் நழுவிப்பாலில் விழுந்தாற்போல!

  • பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு வொதவாது.

  • பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?

  • பனி பெய்து குளம் நிரம்பாது.

  • பனி பெய்தால் மழை இல்லை, பழம் இருந்தால் பூ இல்லை.

  • பனை நிழலும் நிழலோ, பகைவர் உறவும் உறவோ?

  • பனை மரத்தின் கீழே பாலைக் குடித்தாலும் கள் என்று நினைப்பர்.

  • பனை மர நிழலும் சரி, மறப்பய உறவும் சரி.

  • பனை மரத்து நிழல்ல பாய விரிச்சு படுத்த மாதிரி பாடா படுத்துது! நிழலும் ஒரு அடி. நிம்மதியும் அதுக்குள்ளே.

  • பன்றிக்குப் பின்னால் போகிற கன்றும் கெடும்.

  • பன்றியோடு சேர்ந்த கன்றும் மலம் தின்னுமாம்.

  • பன்றி பல குட்டி சிங்கம் ஒரு குட்டி.

  • பக்கத்து வீட்டு சாம்பாருக்கு ருசி அதிகம்.

  • பகலில் பசுமாடே கண்ணுக்குத் தெரியாது, இரவில் எருமைமாடா தெரியப்போகிறது?

பா

  • பாக்க ஒரு தரம் கும்புட ஒரு தரமா?

  • பாட்டி சொல்லைத் தட்டாதே.

  • பாண்சேரிப் பற்கிளக்கு மாறு (பண்டைத் தமிழ்நாட்டில் இசைத்தமிழைச் சிறப்பாய் வளர்த்துவந்தவர் பறையருள், ஒரு பிரிவினரான பாணரே.)

  • பாத்திரமறிந்து பிச்சை இடு, கோத்திரமறிந்து பெண்ணை எடு.

  • பாம்பாட்டிக்குப் பாம்பிலே சாவு, கள்ளனுக்கு களவிலே சாவு .

  • பாம்பின் கால் பாம்பறியும்.

  • பாம்பும் சாகக் கூடாது கம்பும் உடையக் கூடாது.

  • பாம்பு தின்கிற ஊர் போனால், நடுமுறி தமக்கு என்று இருக்க வேண்டும்!

  • பாம்பு தின்ற ஊருக்குப்போனா நடுக்கண்டம் நம்ப கண்டம்.

  • பாம்பு என்று அடிக்கவும் முடியாது, பழுதை என்று தாண்டவும் முடியாது.

  • பாம்பு கடிச்சுதா? பயம் கடிச்சுதா?

  • பாம்பு கடித்தால் பத்து நிமிஷம், அரணை கடித்தால் அரை நிமிஷம்.

  • பாம்பு என்றால் படையும் நடுங்கும்.

  • பாரியாள் ரூபவதியானால் தன் சத்துரு.

  • பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்.

  • பாலூட்டி வளர்த்தாலும் பாம்பின் குணம் மாறுமா?

  • பாலைக் குடித்ததுமட்டு மல்லாமல் பூனை பானையை வேறுடைத்ததாம்!

  • பானை பிடித்தவள் பாக்கியசாலி.

பி

  • பிஞ்சில வளெயாதது கம்புல வளெயுமா?

  • பிள்ளை இல்லா வீட்டுக் கிழவன் துள்ளி விளையாடினானாம்!

  • பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டிவிட்டக் கதையாக...

  • பிச்சை எடுத்ததாம் பெருமாள் அதை தட்டிப் பறிச்சுதாம் அனுமார்.

பு

  • புகைக்கு தப்பி, அடுப்பில் விழுந்த மாதிரி.

  • புத்திகெட்ட இராசாவுக்கு மதிகெட்ட மந்திரி.

  • புத்திமான் பலவான்.

  • புலி அடிச்சுதா? கிலி அடிச்சுதா?

  • புலிக்குப் பிறந்தது பூனையாய்ப் போகுமா?

  • புலிக்கு பயந்து சிங்கத்தின் வாயில் விழுந்தானாம்!

  • புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டதாம்.

  • புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்.

  • புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.

  • புலவர் போற்றினும் போற்றுவர், தூற்றினும் தூற்றுவர்.

பூ

  • பூனை கண்ணை மூடினால் பூலோகம் இருண்டு போய்விடுமா?

  • பூனை குட்டியை மாத்தினாற்போல.

  • பூ மலர்ந்து கெட்டது வாய் விரிந்து கெட்டது

  • பூமியைப்போலப் பொறுமை வேண்டும்.

  • பூவிற்றகாசு மணக்குமா?

  • பூனைக்கு கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம்.

  • பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்.

  • புயலுக்குப் பின்னே அமைதி.

  • பூனை உள்ள இடத்தில் எலி பேரன் பேத்தி எடுக்குது.

  • பூ வின் மற்றோருப் பெயர் பெண்.

பெ

  • பெட்டைக் கோழி எட்டிக் கொத்தாது

  • பெண் என்றால் பேயும் இரங்கும்.

  • பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு.

  • பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.

  • பெண்ணென்று பிறந்த போது புருடன் பிறந்திருப்பான்.

  • பெண் வளர்த்தி பீர்க்கங் கொடி.

  • பெண்ணுக்கு இடம் கொடேல்.

  • பெண் சிரித்தால் போச்சு, புகையிலை விரிந்தால் போச்சு!!

  • பெண்டாட்டி இல்லை, கருவும் இல்லை மகனின் பெயர் கரிகாலனாம்....

  • பெத்த அம்மா செத்தா பெத்த அப்பன் சித்தப்பன்

  • பெருமாள் இருக்கிற வரையில் திருநாள் வரும்.

  • பெருமை ஒருமுறம்; புடைத்து எடுத்தால் ஒன்றும் இல்லை!

  • பெருமையும் சிறுமையும் வாயால் வரும்.

  • பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு.

  • பெற்றால் தான் பிள்ளையா?

  • பெண்பிள்ளை சிரித்தால் போச்சு, புகையிலை விரிந்தால் போச்சு.

  • பெண்ணும் போதை தரும், கள்ளும் போதை தரும் இதற்கு தான் நாம் பெண்கள் என்று கூறுகிறோம்

  • புகையிலை சுருள்நிலையிலிருந்து அகன்று விரிந்தால் பயன்படுத்தப் பக்குவமாகிவிட்டதென்று செடியிலிருந்து பறித்துவிடுவார்கள் அதுபோலவே ஒரு கன்னிப்பெண் ஒருவனைப் பார்த்து நட்பாகச் சிரித்தாலும், அவள் தன்னை விரும்புகிறாள் என்று தவறாக நினைத்து அவளை தன் காமவாஞ்சைக்கு பயன்படுத்திக்கொள்ள முற்படுவன் என்றுப்பொருள்...

பே

  • பேசப் பேச மாசு அறும்.

  • பேசாதிருந்தால் பிழையொன்றுமில்லை.

  • பேராசை பெருநட்டம்.

  • பேராசைக்காரனைப் பெரும்புளுகன் வெல்லுவான்.

  • பேர் இல்லாச் சந்நிதி பாழ், பிள்ளை இல்லாச் செல்வம் பாழ்

  • பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்.

  • எவ்வளவு மேலான/புனிதமான விடயங்களும் தீயவன்/கொடுங்கோலன் ஆட்சிபுரியும்போது அவை அந்த நாட்டில் கெட்டு,அழிவுறும் என்பது பொருள்.

  • பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் முருங்கை மரத்தில் ஏறத்தான் வேண்டும்.

பொ

  • பொங்கும் காலம் புளி , மங்குங் காலம் மாங்காய்.

  • பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை , மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை.

  • பொய் சொன்ன வாய்க்குப் போசனங் கிடையாது.

  • பொருள் இல்லார்க்கு இவ்வுலகு இல்லை, அருள் இல்லார்க்கு அவ்வுலகு இல்லை.

  • பொறுத்தார் பூமி ஆள்வார் பொங்கினார் காடாள்வார்.

  • பொறி வென்றவனே அறிவின் குருவாம்.

  • பொறுமை கடலினும் பெரிது.

  • பொற்கலம் ஒலிக்காது, வெண்கலம் ஒலிக்கும்.

  • பொன் ஆபரணத்தைப் பார்க்கிலும் புகழ் ஆபரணமே பெரிது.

  • பொன் குடத்திற்கு பொட்டிட்டா பார்க்கணும்?

  • பொக்கை வாயனுக்கு பொரி உருண்டை கிடைத்தாற் போல...

போ

  • போதாத காலத்தில் புடுக்கும் பாம்பாய்ப் பிடுங்கும்.

  • போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.

  • போரோடு தின்கிற மாட்டுக்குப் பிடுங்கி போட்டுக் கட்டுமா?

  • போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்.

  • போகாத ஊருக்கு வழி காட்டுகிறான்/வழி சொல்லுகிறான்.

  • செயல்படுத்த முடியாத காரியங்கள்/செயல்களைப்பற்றி ஒருவர் பேசும்பொது/சொல்லும்போது, எதிர்த் தரப்பார் கையாளும் பழமொழி..ஒரு ஊரே இல்லை ஆனால் அதற்குப்போக வழி காட்டுகிறான் என்பதாகும்...

  • மகன் செத்தாலும் சாகட்டும், மருமகள் தாலி அறுக்கணும்.

  • மடியிலே கனமிருந்தால்தான் வழியிலே பயம்.

  • மடை திறந்த வெள்ளம் போல ......

  • மட்டான போசனம் மனதிற்கு மகிழ்ச்சி.

  • மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?

    • இது 'மண்குதிரை (மண்குதிர்) நம்பி ஆற்றில் இறங்கலாமா' என்பதன் திரிந்த வழக்கு
  • மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்கலாமா?மண்டையுள்ள வரை சளி போகாது.

    • மண்குதிர் என்பது புதுமணல் மேடு. அதை நம்பி ஆற்றில் இறங்கினால் புதைந்துவிட வாய்ப்புண்டு.
  • மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை பொல்லாது.

  • மணி அடித்தால் சோறு, மயிர் முளைத்தால் மொட்டை.

  • மதியார் வாசலை மிதியாதிருப்பதே உத்தமம்.

  • மதியாதார் வாயிலை மிதியாமை கோடி பெறும்.

  • மந்திரிக்கும் உண்டு மதிக்கேடு.

  • மரம் சும்மாயிருந்தாலும் காற்று விடுமா?

  • மரம் செவனேன்னு கெடந்தாலும், காத்து கடனேன்னு அலைகழிக்குமாம்

  • மரம் வெட்டுகிறவனுக்கு நிழலும்..., மண் தோடுகிறவனுக்கு இடமும் கொடுக்கும்.

  • மரம் வைத்தவன் தண்ணீர் வார்ப்பான்.

  • மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.

  • மருந்தும் விருந்தும் மூன்று வேளை.

  • மருந்தே யாயினும் விருந்தோடு உண்.

  • மலிந்த சரக்குக் கடைத் தெருவுக்கு வரும்.

  • மலை அத்தனை சாமிக்குக் கடுகு அத்தனை கர்ப்பூரம்.

  • மலை ஏறினாலும் மச்சினன் உதவி தேவை.

  • மலையைத் துளைக்கச் சிற்றுளி போதாதா?

  • மலை வாயில பொழுது, மக்கள் வாயில சோறு.

  • மயிரை கட்டி மலையை இழு. வந்தால் மலை போனால் மயிர்

  • மயிலே மயிலே என்றால் இறகு போடுமா?

  • மல்லாந்து உமிழ்ந்தால் மார்மேல் விழும்.

  • மல்லாந்து படுத்துக்கொண்டு காறி துப்பினாற் போல.

  • மவுனம் கலக நாசம்

  • மழைமுகம் காணாத பயிரும் தாய்முகம் காணாத பிள்ளையும்.

  • மழை விட்டாலும் தூவானம் விடவில்லை.

  • மனதிலிருக்கும் இரகசியம் மதி கேடனுக்கு வாக்கிலே.

  • மனமுரண்டிற்கு மருந்தில்லை.

  • மனம் உண்டானால் இடம் உண்டு.

  • மனம் இருந்தால் மார்க்கமும் உண்டு.

  • மனம் தடுமாறினால் மாற்றானுக்கு வலிமை.

  • மனம் போல வாழ்வு.

  • மனையுமில்லை, கருவுமில்லை மகனின் பெயர் சங்கிலிக்கருப்பனாம்!

  • அடிப்படையான விடயங்கள் கைவசம் எதுவுமில்லாமல் பெரிய திட்டங்களும், எதிர்ப்பார்ப்புகளும் கொண்டவர்களைப் பரிகாசம் செய்யும் பழமொழி...எப்படி ஒருவன் தனக்கு பெண்டாட்டியில்லாமல், இருந்தாலும் அவள் கர்ப்பமாக முடியாவிட்டாலும், தன்மகன் இருப்பதாக நினைத்துக்கொண்டு, அவனுக்கொரு பெயரிட்டு மகிழ்வதைப்போல என்னும் பொருளில் பயன்படுகிறது...

  • மன்னன் எப்படியே மன்னுயிர் அப்படி.

  • மண்ணுயிரை தன்னுயிர்போல் நினை.

  • மணலை கயிறாக திரிப்பது போல. ..

  • மந்திரத்தால் மாங்காய் விழாது!

  • மழை விட்டும் தூவானம் விடவில்லை!

மா

  • மாதா பிதா செய்தது மக்களைக் காக்கும்.

  • தாயும் தந்தையும் செய்த நற்செயல்களால் விளைந்த புண்ணியப் பலன்கள் அவர்களை மட்டுமல்லாது, அவர்கள் பெற்றப் பிள்ளைகளையும் காக்கும் என்பது பொருள்

  • மாடம் இடிந்தால் கூடம்.

  • மாடு எளைச்சாலும் கொம்பு எளைக்காது!

  • மாடு எளைச்சாலும் கொம்பு எளைக்குமா?

  • மாடு கிழமானாலும் பாலின் சுவை போகுமா?

  • மாடு கெட்டால் தேடலாம் மனிதர் கெட்டால் தேடலாமா?

  • மாடு மேய்க்காமற் கெட்டது பயிர் பார்க்காமற் கெட்டது.

  • மாடு வாங்கறதுக்கு முன்னால நெய் கலயம் தேடுனது மாதிரி

  • மாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும்.

  • மா பழுத்தால் கிளிக்காம், வேம்பு பழுத்தால் காக்கைக்காம்.

  • மாமியாரும் ஒரு வீட்டு மாட்டுப் பெண்தான்.

  • மாமியார்க்குச் சாமியார் இவள்.

  • மாமியார் செத்ததற்கு மருமகள் அழுதது போல்.

  • மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம்.

  • மாமியார் உடைத்தால் மண்கலம், மாட்டுப்பெண் உடைத்தால் பொன்கலம்!

  • மாமியார் மெச்சின மருமகளில்லை, மருமகள் மெச்சின மாமியாரில்லை.

  • மாரடித்த கூலி மடி மேலே.

  • மாரிக்காலத்தில் பதின்கல மோரும் கோடைக்காலத்தில் ஒருபடி நீருஞ் சரி.

  • மாரி யல்லது காரியம் இல்லை.

  • மாவுக்குத் தக்க பணியாரம்.(மாவுக்கேத்தப் பணியாரம்)

  • மாற்றானுக்கு இடங் கொடேல்.

  • மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு!

  • மானம் பெரிதோ? உயிர் பெரிதோ?

  • மானைக் காட்டி மானைப் பிடிப்பார்.

  • மானத்தை விட்டால் மார் மட்டும் சோறு.

மி

  • மின்னுவதெல்லாம் பொன்னல்ல

  • மிஞ்சியது கொண்டு மேற்கே போகுதல் ஆகாது.

  • மிதித்தாரை கடியாத பாம்பு உண்டோ?

  • மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை.

  • மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.

மீ

  • மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது.

  • மீன் குஞ்சுக்கு நீந்தவா கற்றுக்கொடுக்கணும்?

  • மீன் வித்த காசு நாறுமா?

  • மீ தூண் விரும்பேல்.

மு

  • முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா ?

  • முன் ஏர் சென்ற வழியே, பின் ஏர் செல்லும். (பெற்றோர் வழிதான், குடும்பம் செல்லும்.)

  • முன் ஏர் போன வழிப் பின் ஏர்.

  • முன்கை நீண்டால்தான் புறங்கை நீளும்.

  • முன்கை நீண்டால் முழங்கை நீளும்.

  • முடிச்சு போட்டு பேசறவங்க, முட்டாள்.( நன்கு அறியாமல் பேசக்கூடாது.)

  • முட்டிக்கு போனாலும் மூன்று பேர் ஆகாது.....(முட்டி என்றால் பிச்சை)

  • முண்டச்சிக்கு வருவதெல்லாம் முறட்டு இழவாம்!

  • முழுக்க நனஞ்ச பின் முக்காடு எதுக்கு?

  • முழு பூசனிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா?

  • முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்தாற் போல.

  • முகத்துக்கு முகம் கண்ணாடி

  • முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா?

  • முடங்க பாய் இல்லையினு சடங்க நிறுத்த முடியுமா?

  • முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் பட்டாற்போல!..

  • முட்டாள் தனத்துக்கு முதல் பாக்குக்காரன்.

  • முட்டையிடுகிற கோழிக்கு வருத்தம் தெரியும்.

  • முட்டிக்கு (பிச்சைக்கு) போனாலும் மூன்று பேர் ஆகாது.

  • முதலியார் டம்பம் விளக்கெண்ணெய்க்குக் கேடு.

  • முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா

  • முதல் கோணல் முற்றுங் கோணல்

  • முத்தால் நத்தைப் பெருமைப்படும் , மூடர் எத்தாலும் பெருமை படார்.

  • முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை.

  • முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்!

  • முயற்சி திருவினை ஆக்கும்.

  • முருங்கை பருத்தால் தூணாகுமா?

  • முள்ளு முனையிலே மூணு குளமாம்!

  • மிகச் சிறிய பிரச்சினை/விடயத்திலும், சுமுகமாக இல்லாமல், ஒருவருக்கொருவர் முரண்டுப் பிடித்துக்கொண்டு ஒற்றுமையில்லாமல் பிரிந்துக் கிடப்பது என்றுப் பொருள்...முள்ளின் முனை எவ்வளவு சிறியது!...அதில் மூன்று பின்னங்களை உண்டாக்குவது எப்படி சரியல்லவோ அப்படி என்பதாம்...

  • முள்ளுமேல் சீலைபோட்டால் மெல்ல மெல்லதான் வாங்கவேண்டும்.

  • முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

  • முற்றும் நனைந்தவர்களுக்கு ஈரம் ஏது?

  • முன் வைத்த காலைப் பின் வைக்காதே!

  • முன்ன பேயாமல் கெடுக்கும், பின்ன பேஞ்சு அழிக்கும்.

  • முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?

மூ

  • மூட கூட்டுறவு முழுதும் அபாயம்.

  • மூத்தோர் சொல் வார்த்தை அமுதம்.

  • மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக்காயும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும்.

  • மூன்று முறை முகத்தில் அடித்தால் புத்தருக்கும் கோபம் வரும்.

  • மூர்க்கனுக்கு செய்யாதே உபதேசம்.

  • மூர்த்தி சிறியதானாலும் கீர்த்தி பெரியது.

மெ

  • மெய்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.

  • மெல்லப்பாயும் தண்ணீர் கல்லையும் குழியாக்கும்.

மே

  • மேருவைச் சார்ந்த காகமும் பொன்னிறம்

  • மேற்கே மழை பெய்தால் கிழக்கே வெள்ளம் வரும்

மொ

  • மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டாற்போல!

  • மொழி தப்பினவன் வழி தப்பினவன்

மோ

  • மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள்.

  • மோரை பெருக்கு, நெய்யை உருக்கு.

  • மெளனம் மலையைச் சாதிக்கும்.

  • யதார்த்தவாதி வெகுசன விரோதி.

  • உள்ளதை உள்ளபடியே, ஒளிவு, மறைவு இல்லாமல், நடைமுறைப்படி சொல்பவன்/பேசுபவன் பெரும்பாலாருக்கு/எல்லாருக்கும் பிடிக்காத விரோதி போலாகிறான் என்பது கருத்து.

யா

  • யார் இட்ட சாபமோ? அடிநாளின் தீவினையோ?

  • யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்.

  • யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.

  • யானைக்கு வாலாக இருப்பதைவிட, எறும்புக்குத் தலையாக இருப்பது மேல்.

  • யானைப் பசிக்கு சோளப் பொரி.

  • யானை படுத்தால் குதிரை உயரம் (அதனால், யானையாக எழுந்து நில் என்ற பொருள்).

யோ

  • யோக்கியன் வர்றான் சொம்பெடுத்து உள்ள வை.


ரா

  • ராமேஸ்வரம் போனாலும் சனீஸ்வரன் விடாது.

  • ராஜாவ மிஞ்சுன ராஜ விசுவாசி.

  • வஞ்சகம் வாழ்வைக் கெடுக்கும்.

  • வட்டி ஆசை முதலுக்கு கேடு.

  • வடக்குப் பார்த்த மச்சு வீட்டைப் பார்க்கிலும் தெற்குப் பார்த்த குச்சு வீடு நல்லது.

  • வடக்கே கருத்தால் மழை வரும்.

  • வண்ணானுக்கு வண்ணாத்தி மேல் மோகம், வண்ணாத்திக்கோ கழுதை மேல் மோகம்.

  • வணங்கின முள் பிழைக்கும்.

  • வணங்குன புல்லு தைக்கும்.

  • வந்த மாட்டயும் கட்ட மாட்டான் வராத மாட்டயும் தேட மாட்டான்.

  • வந்த விதி வந்தால் வாய் திறக்க வழியிருக்காது!

  • வந்த வேலெயப் பாக்காம பந்தக்காலெ ஆட்னானான்.

  • வந்ததை வரப்படுத்தடா வலக்காட்டு ராமா!

  • வந்தா வரவுல வை வராட்டி செலவுல வை.

  • வரவு எட்டணா செலவு பத்தணா.

  • வரவுக்குத் தக்கபடி செலவை வரையறு.

  • வரிந்து இட்ட அன்னமும் சொரிந்து இட்ட எண்ணெய்யும்... (ஒட்டும்)

  • வருந்தினால் வாராதது இல்லை.

  • வரும் விதி வந்தா பட்டே ஆகவேண்டும்.

  • வல்லான் வகுத்ததே வாய்க்கால்

  • வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.

  • வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு

  • வல்லூறு பார்வை இங்கே. வௌவால் பார்வை எங்கே?

  • வழவழத்த உறவைப் பார்க்கிலும் வைரம் பற்றிய பகை நன்று.

  • வழிவழியாப் போகும்போது விதி விதியா வருது

  • வளத்த பிள்ளை சோறுபோடாவிடிலும் வைத்த பிள்ளை சோறு போடும்.

  • வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தாற் (பாய்ந்தது)போல.....

  • வளவனாயினும் அளவறிந் தளித்துண்

வா

  • வாங்கிறதைப் போலிருக்க வேண்டும் கொடுக்கிறதும்

  • வாங்கப்போனால் ஆனை விலை, விற்கப்போனால் குதிரை விலை.

  • வாய்ச்சொல் தலசுமை (வாய்ச்சொல் தலமூட்ட)

  • வாயிலிருக்கிறது வழி!

  • வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.(பிழைத்துக்கொள்ளும்)

  • வாய் சர்க்கரை கை கருணைக் கிழங்கு.

  • வாய் மதத்தால் வாழ்வு இழக்கும்.

  • வாய்க்கேற்ற கை

(வெறும் பேச்சு மட்டுமல்ல, பேசுமளவுக்கு காரியங்களும் செய்வர் எனப்பொருள்)

  • வாழ்கிறதும் கெடுகிறதும் வாயினால்தான்.

  • வாழ்வும் தாழ்வும் சில காலம்.

  • வாழும் பிள்ளையை மண் விளையாட்டில் தெரியும்.

  • வாழைப்பழம் வேண்டாமென்னும் குரங்குமுண்டோ?

  • வாழையடி வாழையாக .........

  • வாணலிக்குத் தப்பி அடுப்பில் விழுந்த கதையாய் .....

  • வானம் பொய்த்தாலும் நீதி பொய்க்காது

வி

  • விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.

  • விரலுக்குத் தகுந்த வீக்கம்.

  • விறகு வெட்டிக்குத் தலைவலி வந்தா, விறகால ரெண்டு போடு

  • விடிய விடிய ராமாயணம் கேட்டு, விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை.

  • விடிய விடிய வெகுமானம் விடிஞ்சா அவமானம்.

  • விடு என்றால் பாம்புக்கு கோபம், கடி என்றால் தவளைக்கு கோபம்.

  • விதி எப்படியோ மதி அப்படி.

  • விதியை மதியால் வெல்லலாம்.

  • வித்தைக்கு அழிவில்லை.

  • விந்து விட்டான், நொந்து கெட்டான்!

  • மிதமிஞ்சிய சம்போகத்தில் ஈடுபட்டு வீரியத்தை அதிக அளவில் இழப்பவன், பற்பல உடற் உபாதைகளால் பாதிக்கப்பட்டு மிகவருந்துவர் என்றுப் பொருள்

  • வியாதிக்கு மருந்துண்டு விதிக்கு மருந்துண்டா?

  • விருப்பத்தினால் ஆகாதது வீம்பினால் ஆகுமா?

  • விரை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா?

  • வில்வப்பழம் தின்பார் பித்தம் போக பனம் பழம் தின்பார் பசி போக.

  • விலை மோரில் வெண்ணை எடுத்துத் தலைச்சனுக்குக் கல்யாணம் செய்வாளாம்

  • விளக்கு மாற்றுக்குப் பட்டுக் குஞ்சமா?

  • விளையாட்டாய் இருந்தது வினையாய் முடிந்தது.

  • விளையும் பயிர் முளையிலே தெரியும்.

  • வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான்

  • விருந்தும் மருந்தும் மூன்று நாள்.

  • விற்கப்போனால் குதிரை விலை, வாங்கப்போனால் ஆனை விலை.

வீ

  • வீட்டுக்கு வீடு மண் வாசற்படி

  • வீட்டுக்கு அடங்காத பிள்ளை ஊருக்கு அடங்கும்!

  • வீடு போ போ எங்குது, காடு வா வா எங்குது.

  • வீட்டுத் திருடனை பிடிப்பது அந்த கடவுளுக்கும் ஏலாது.

  • வீம்புக்கு ஊம்பினாற் போல!

வெ

  • வெட்டிண்டு வா என்றால் கட்டிண்டு வருவான்.

  • வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு.

  • வெட்றவன தான ஆடு நம்பும்.

  • வெண்கலக்கடையில் யானை புகுந்தாற் போல....

  • வெண்டை முதிர்ந்தாலும் பிரம்மசாரி முதிர்ந்தாலும் வேலைக்கு ஆகாது!!

  • வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.

  • வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.

  • வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப் போல....

  • வெயிலின் அருமை நிழலில் தெரியும்!

  • வெளங்தாவன் வேலைக்கு போனான்னாம் வேலெ ஆப்புட்டுச்சாம் கூலி ஆப்புடலயாம்.

  • வெள்ளத்த தான ஈ மொய்க்கும்.

  • வெளுத்ததெல்லாம் பாலல்ல.

  • வெறும் வாய் மெல்லுகிறவளுக்கு அவல் கிடைச்சதுபோல .

வே

  • வேலிக்கு ஓணான் சாட்சி.

  • வேலிலா போற ஓணான வேட்டிக்குள்ள உட்டாப்ல.

  • வேலிக்குப் போட்ட முள் காலுக்கு வினையாச்சு.

  • வேலியே பயிரை மேய்ந்தாற் போல...

  • வேலை வரும்போதுதான் பேல வரும்.

  • வேண்டும் என்றால் வேரிலும் காய்க்கும்; வேண்டாவிட்டால் கொம்பிலும் காய்க்காது!

  • வேண்டாத பெண்டாட்டி கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம். (Faults are thick when love is thin)

  • வேண்டா வெறுப்புக்கு புள்ள பெத்து காண்டாமிருகம்-னு பேரு வச்சது மாதிரி...

  • வேதாரண்யம் விளக்கழகு

  • வேளையும், நாழிகையும் வந்தால், வேண்டாம் என்றாலும் நிற்காது.

  • வேளைக் கள்ளிக்குப் பிள்ளை சாக்கு.

வை


  • வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்குக் கொடு.

  • வைத்தியனுக்கு தன் வைத்தியம் பலிக்காது.

  • வைத்தியன் பெண்டாட்டி சாவதில்லையா? ஜோசியன் பெண் அறுப்பதில்லையா?

  • வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை.

  • வைத்தால் பிள்ளையார், வழித்து எறிந்தால் சாணி.

ஆ ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டும். பொறுமை மிக அவசியம் ஆக்கியவனுக்கு சட்டியும் பானையும்தான் மீதம். ஆகும் காலம் ஆகும், போகும் காலம் போகும். ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள். ஆசை இருக்கு ஆனை மேல் ஏற; அம்சம் இருக்கு மண் சுமக்க! ஆசை உள்ளளவும் அலைச்சலும் உண்டு! ஆசை வெட்கம் அறியாது. ஆடத் தெரியாத ஆட்டக்காரி மேடை கோணல் என்றாளாம்.(A bad workman blames his tools. ஆட்டசெல்லம், பூட்டசெல்லம், அடிக்க செல்லம் அயலாரகத்திலே! ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இருக்குமா? ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்; பாடிக் கறக்கிற மாட்டை பாடிக் கறக்க வேண்டும். ஆடிப் பட்டம் தேடி விதை. ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை பெய்யும். ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும். ஆடிக் காற்றில் அம்மியே பறக்கும் பொது இலவம்பஞ்சு என் கதி என்ன என்று கேட்டதாம்! ஆடிக்கு ஒரு தரம் அமாவாசைக்கு ஒரு தரம். ஆடு கடிக்குமுனு அறைக்குள்ள படுத்தவ, அவுசாரியாப் போக பேயாய் அலைஞ்சாலாம். ஆடு நனைகிறதே என்று ஒநாய் அழுமாம். ஆடு பகையாம் குட்டி உறவாம். ஆடு வளர்க்றது அழகு பாக்றத்துக்கு இல்லெ, கோழி வளக்குறது கொஞ்சு பாக்றதுக்கு இல்லெ. ஆடும் திரிகை அசைந்து நிற்குமுன், ஓடும் சிந்தை ஒன்பதாயிரம். ஆட்டுக்கு வால் அளவறிந்து வைத்திருக்கிறது. ஆட்டை தோளில் போட்டுக்கொண்டு, ஊரெல்லாம் தேடினானாம். ஆட்டக்காரி ஆகவில்லை என்பதற்காகத் தோட்டக்காரியைச் சிங்காரித்தது போல. ஆண்மூலம் அரசாளும், பெண்மூலம் நிர்மூலம் இது 'ஆண்மூலம் அரசாளும், பெண்மூலம் நிர்மலம்' என்பதன் திரிந்த வழக்கு. ஆண்மூலம் அரசாளும், பெண்மூலம் நிர்மலம் ஆண்டை எப்ப சாவான் திண்ண எப்ப காலியாகும்? ஆண்மூலம் அரசாளும், பெண் மூலம் (வழியாக) தெளிவு, நிம்மதி என்பது பொருள். ஆத்தாளும் மகளும் அவுசாரியாப் போயி, முந்தானையில வச்சிருந்த முக்கால் ரூபாயயும் புடுங்கிட்டு விட்டாங்களாம். ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு. ஆத்திரத்த அடக்குனாலும் மூத்திரத்த அடக்கக்கூடாது. ஆத்துக்குப் போயும் வேர்த்து வடிஞ்ச கதையா. ஆபத்திற்குக் குற்றம் (தோஷம்) இல்லை! ஆயிரங்கலம் நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி போதும். ஆயிரம் தலை கண்டால் ஒரு கோயிலைக் கண்டது போல ஆயிரம் பேரைக் கொன்றவர் அரை வைத்தியர் இது 'ஆயிரம் வேரைக் கொன்றவர் அரை வைத்தியர்' என்பதன் திரிந்த வழக்கு. ஆயிரம் வேரைக் கொன்றவர் அரை வைத்தியர்ஆயக்காரன் ஐந்து பணங் கேட்பான்; அதாவெட்டுக்காரன் ஐம்பது பணங் கேட்பான் மூலிகைக்காக ஆயிரம் வேரைக் கொன்றவர் அரை வைத்தியர் என்பது பொருள். ஆயிரம் வந்தாலும் அவசரப் படாதே. ஆயிரம் காசு கொடுத்துக் குதிரை வாங்கியவனுக்கு, அரை காசு கொடுத்து தீனி வாங்க முடியலையாம்! ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது. ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை அன்னை தந்தையே அன்பின் எல்லை ஆயிரம் பொய் சொன்னாலும் ஒரு கல்யாணம் செய்து வை. ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும். ஆரால் கேடு, வாயால் கேடு. ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு. ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி. ஆலயம் தொழுவது சாலமும் நன்று. ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை. ஆலும் வேலும் பல்லுக்குறுதி. ஆழமறியாமல் காலை இடாதே. ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே! ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும். ஆள் கூடுனா பாம்பு சாகுமா? ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ். ஆள் அறிந்து ஆசனம் போடு, பல் அறிந்து பாக்குப் போடு ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு. ஆள் பாதி, ஆடை பாதி. ஆளப்பாத்து ஆசனம் போடு, பல்லைப்பாத்து பாக்குப்போடு. ஆழம் தெரியாமல் காலை விடாதே. ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு. ஆறின கஞ்சி பழங் கஞ்சி. ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்? ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு. ஆற்றோடு போறவனுக்கு ஊர்ப்போக்கு எதற்கு. ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ். ஆறு பெண்ணைப் பெத்தால் அரசனும் ஆண்டியாவான்! ஆறு கெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு. ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு. ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலும் வைக்காதே. ஆனா அந்த மடம் ஆகாட்டி சந்த மடம். ஆனை கறுத்தால் ஆயிரம் பொன். ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம். ஆனைக்கும் அடி சறுக்கும். ஆனைக்கு கோவணம் கட்டு-(ரதைப்)-வதைப்போல... செய்வதற்குக் கடினமான/முடியாத வேலையைப்பற்றிக் குறிப்பிடும்போது சொல்லப்படும் வார்த்தைகள் ஆனை படுத்தால் ஆள் மட்டம். ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே. ஆனைக்கு விளாம்பழம் ஓட்டோடு. ஆனைப் பசிக்கு சோளப் பொரி ஆனை கொழுத்தால் வாழைத்தண்டு, மனுசன் கொழுத்தால் கீரைத்தண்டு. ஆனைய புடின்னா பூனைய புடிச்சானாம். ஆத்தா அம்மணமாம் கும்பகோணத்தில் கோ தானமாம். ஆசை இருக்கு தாசில் பண்ண அதிருஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க. ஆசைக்கு ஒரு பெண்ணும், ஆஸ்திக்கு ஒர் ஆணும்!! ஆலயம் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம். ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாது. ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டா? இ இக்கரைக்கு அக்கரை பச்சை. இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான். இஞ்சி இலாபம் மஞ்சளில். இஞ்சி விற்ற லாபம் மஞ்சளில் போயிற்று. இஞ்சி தின்ன குரங்கு மாதிரி.... இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான். இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடிங்கிய கதையாக..... இட்ட உறவு எட்டு நாளைக்கு, நக்கின உறவு நாலு நாளைக்கு. இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை. இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர். இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது. இரக்கப் போனாலும் சிறக்கப் போ. இரண்டு வீட்டிலும் கலியாணம், இடையிலே செத்ததாம் நாய்க்குட்டி. இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே. இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே. இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை, இராச திசையில் கெட்டவனுமில்லை இராசா மகளானாலும் கொண்டவனுக்கு பெண்டுதான். இருக்க எடம் கொடுத்த படுக்க பாய் கேப்பான். இருக்குறவ அள்ளி முடியறா. இருட்டுக்கு முந்தி இரவு உணவு. இரும்பு அடிக்ற எடத்துல ஈக்கு என்ன வேலை? இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா. இரும்பூறல் காணாமல் இரும்பிச் செத்தான். இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான். இருவர் நட்பு ஒருவர் பொறை. இலவு காத்த கிளி போல.... இல்லாது பிறாவது அள்ளாது குறையாது. இல்லது வாராது; உள்ளது போகாது. இல்லறம் அல்லது நல்லறமல்ல. இல்லாததை கொண்டா, கல்லாததைப் பாடு (என்பர்கள், எங்கிறார்கள்) இல்லாதவனுக்கு பசியேப்பம், இருப்பவனுக்கோ புளியேப்பம். இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா? இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று. இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான். இளங்கன்று பயமறியாது. இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து. இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம். இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்குக் கொள்ளு! இளைய பிள்ளைக்காரிக்குத் தலைப் பிள்ளைக்காரி வைத்தியம் சொன்னது போல. இறங்கு பொழுதில் மருந்து குடி. இறுகினால் களி , இளகினால் கூழ். இரைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம். இரைத்த கிணறு ஊறும், இரையாத கிணறு (கேணி) நாறும். இனம் இனத்தோடே வெள்ளாடு தன்னோடே இனம் இனத்தோடே எழைப்பங்கன் பணத்தோடே. இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுக்கமாட்டானா? ஈ ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்; தீயோனுக்கு உடலெங்கும் விடம். ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும். ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர். ஈர நாவிற்கு எலும்பில்லை. ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாள் ஆக்குகிறான். ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை. உ உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும். உட்கார்ந்து தின்றால் மலையும் கரையும். உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும். உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை. உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா? உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை. உடையவன் இல்லாதது ஒரு மொழந்துண்டு. உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு. உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு. உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்காதே. உண்டிக் கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் உண்டு கொழுத்தால் நண்டு வளையில் இராது. உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும். உண்ணீர் உண்ணீரென்றே ஊட்டாதார் தம் மனையில் உண்ணாமை கோடி பெறும். உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும். உதட்டில் வெல்லம், உள்ளத்தில் கள்ளம்/விஷம். உதிரம் பெருத்தால் உத்திரத்திற்கு ஆகாது. உதிரியா கிடந்தாலும் மல்லிகை! உப்பா கிடந்தாலும் வெள்ளை உப்பிட்டவரை உள்ளளவும் நினை. உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான் உப்பில்லாப் பண்டம் குப்பையிலே உப்பில்லாப் பண்டம் பாழ், குடியில்லா வீடும் பாழ். உப்பில்லா பத்தியக்காரன் ஊறுகாய்க்கு ஆசைப்பட்டானாம்! உப்புல தெரியுமாம் துப்பு, நீருல தெரியுமாம் சீரு. உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா? உரம் ஏற்றி உழவு செய் உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா? உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை. உலை வாயை மூடினாலும் ஊர் வாயை மூடமுடியாது! உலோபிக்கு இரட்டை செலவு. உழக்கு பணம் இருந்தால்தான் பதக்கு சமத்து இருக்கும். உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை. உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது. உள்ள அளவும் உப்பிட்நினைடவரை . உள்ளங்கை முன்னால் போனால் பின்னங்கை தானே வரும். உள்ளங்கை புண்ணுக்கு கண்ணாடி வேண்டுமா? உள்ளது சொல்ல ஊரும் அல்ல நல்லது சொல்ல நாடும் அல்ல உள்ளது போகாது இல்லது வாராது. உள்ளதைச்சொன்னால் நொள்ளைக் கண்ணனுக்கு கோவமாம்! உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய. உளவு இல்லாமல் களவு இல்லை. உளறுவாயனுக்கு ஊமையனே மேல். உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது. [இதனை இப்படி கூட கூறுவார்கள்-பார்க்காத உறவும் கேட்காத கடனும் பாழ்] உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன். ஊ ஊசி முனையில் தவமிருந்தாலும் உன்னதுதான் கிட்டும். ஊசி முனையில் மூன்று குளம் ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும். ஊணுக்கு முத்துவான் வேலைக்குப் பிந்துவான். ஊண் அற்றபோது உடலற்றது. ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு. ஊமை சொப்பனம் கண்டாற் போல.. ஊருடன் ஒட்டி வாழ். ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம். ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு. ஊர்க்குருவியைக் கொல்ல இராமபாணமா வேணும்? ஊர் வாயை மூட உலைமுடி இல்லை. ஊரில் கல்யாணம் மார்பில் சந்தனமா? ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி. ஊருடன் பகைக்கின் வேறுடன் கெடும். ஊருக்கு உபதேசமடி பெண்ணே, அது உனக்கில்லையடி கண்ணே. ஊர் சனங்களுக்கு எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்று உபதேசிக்கும் ஒருவன், தன் மனைவி, மக்கள் அவன் ஊர் சனங்களுக்குச் சொன்னதற்கு நேரெதிராக, நடந்துக்கொண்டாலும் கண்டிக்காமல்/கண்டுக்கொள்ளாமல் இருந்துவிடும் இயல்பைக் குறித்துச் சொல்லப்படும் சொலவடை ஊர் அறிந்த பிராமணனுக்கு பூணூல் எதற்கு? ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடல். ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி. ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும். ஊரான் வீட்டு நெய்யே, தன் பெண்டாட்டி கையே. ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடேல். எ எங்கப்பன் குதுருக்குள்ள இல்ல. எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய், உங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன தருவாய் ? எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு. எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா? எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு. எடுத்தாலும் பங்காரு பெட்டியை எடுக்க வேண்டும்; இருந்தாலும் சிங்கார கழுவில் இருக்க வேண்டும்! எடுப்பார் கைப்பிள்ளையைப் போல இருக்காதே! எட்டாத பழத்திற்கு கொட்டாவி விட்டானாம்..(விடாதே!) எட்டிக்குப் பால் வார்த்து வளர்த்தாலும் தித்திப்பு உண்டாகாது. எட்டி பழுத்தென்ன, ஈயார் வாழ்ந்தென்ன? எட்டு வயசான எரும ஏரிக்கு வழி கேக்குதாம். எண் இல்லாதவர் கண் இல்லாதவர். எண்ணத் தொலையாது; ஏட்டில் அடங்காது! எண்ணறக்கற்று எழுத்தறப் படித்தாலும், பெண்புத்தி பின்புத்திதான்! எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர். எண் சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம். எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி. எண்ணிச்செய்வது செட்டு, எண்ணாமல் செய்வது வேளாண்மை. எண்ணெய் முந்துதோ திரி முந்துதோ? எதார்த்தவாதி வெகுசன விரோதி. எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம். எதிரிக்கு எதிரி நண்பன். எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்கவேண்டும். எத்தைத் தின்னால் பித்தம் தெளியும்? (சொலவடை) எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா? எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம். எந்நிலத்து வித்திடுனும் காஞ்சிரங்காய் தெங்காகா எய்தவன் இருக்க அம்பை நோவானேன் ? எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும். எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம். எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே. எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி? எரியும் பந்தத்திற்கு எண்ணெய் வார்ப்பதைப்போல... எருது நோய் காக்கைக்கு தெரியுமா? எருது புண்ணு காக்கைக்குத் தெரியுமா? எருமைமாட்டின் மீது மழை பெய்தாற் போல. எலி அழுதால் பூனை விடுமா? எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும். எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம் எலிக்கறி உடம்புக்கு நல்லதுன்னு பூனை சொல்லுச்சாம். எலி வளை யானாலும் தனி வளை வேண்டும். எலியைக் கொல்ல குடியிருக்கும் வீட்டிற்கே தீ வைத்தாற்போல..(வைத்துக்கொள்ளுவார்களா?) எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா? எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது எல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் துக்குகிறவர் யார்? எல்லாரும் கூடிக் குல்லாய் போட்டனர்! எல்லாரும் தடுக்கின்கீழ் நுழைந்தால், இவள் கோலத்தின் கீழ் நுழைந்ததைப் போல்! என்றைக்கும் இல்லாத திருநாளாக....(சொலவடை) என்றும் செய்யாத, எதிர்பார்க்காத ஒரு காரியத்தை ஒருவர் செய்யும்பொது பயன்படுத்தும் சொலவடை...எ.கா.,என்றைக்கும் இல்லாத திருநாளாக அந்தப்பெரியவர் நம்வீடு தேடி வந்திருக்கிறார்...நம்மாலான உதவிகளைச் செய்வோம்!.. எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா? எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கொடுத்தான் எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம். எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி. எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி. எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும் எள் என்றால் எண்ணெயாக நிற்பான்/இருப்பான்! கொடுக்கப்பட்ட வேலையை எதிர்பார்த்ததற்கும் மேலாக மிகச்சிறப்பாக செய்வான்/செய்யக்கூடியவன் என்றுப் பொருள்... நல்லெண்ணெய் தேவைப்படுபவன் எள்ளைப் பார்த்தவுடன் அது எண்ணெயாக மாறிவிட்டால் எப்படியோ, அப்படி எனக் கொள்ளவேண்டும் எள் என்கிறதற்கு முன்னே எண்ணெய் கொண்டு வருகிறான். எள்ளுக்கு ஏழு உழவு , கொள்ளுக்கு ஓர் உழவு. எளைச்சவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு. எறும்பு ஊரக் கல்லுந் தேயும். எறும்புந் தன் கையால் எண் சாண் எத்தைத் தின்னால் பித்தம் தெளியும்? ஏ ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது. ஏதென்று கேட்பாருமில்லை எடுத்துப் பிடிப்பாருமில்லை. ஏமாந்தவன் தொடையில் திரித்தது லாபம். ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம். ஏரி நிறைந்தால் கரை கசியும். ஏரி மடை என்றால் நோனி மடை (என்கிறார்) ஏரி மேல் கோபித்துக்கொண்டு குண்டி கழுவாமல் போனானாம். ஏருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும். ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும். ஏழை என்றால் எவர்க்கும் எளிது. ஏழைக்கு இரக்கப்பட்டா நாளைக்கு இருக்க மாட்டோம். ஏழைக்கேத்த எள்ளுருண்டை. ஏழையின் சொல் அம்பலம் ஏறாது. ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம். ஏன் நாயேன்னா எட்டி மூக்க நக்குமாம். ஏற்றவன் குண்டிய எட்டனமுட்டும் தாங்கலாம் ஐ ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகா தாம் பேய்ச்சுரைக்காய்க்கு. ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா? ஐந்து வயது வரை பிள்ளையைப் பேய் வளர்க்கும். ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது ஐயர் வரவில்லை என்பதற்காக அமாவாசை நிற்குமா? ஐப்பசி அடை மழை. ஐயருக்கு எதுக்கு ஆட்டுக்குட்டி வெயாபாரம். ஐம்பதிலும் ஆசை வரும் ஒ ஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள். ஒத்தை பிராமணனுக்கு முன்னும், இரட்டை வைசியனுக்கு முன்னும் போகாதே! ஒரு வேலை செய்ய வெளியே போக முயலும்போது எதிரே ஒற்றை அந்தணரோ அல்லது இரண்டு வைசியர்களோ வந்தால் அது சகுனத்தடை...அந்தக் காரியம் நிறைவேறாது என்றுப் பொருள். ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ? ஒரு காசு பேணின் இரு காசு தேறும் ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி நஞ்சு. ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா? ஒரு கை (அல்லது வெறுங்கை) முழம் போடுமா? ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைக்கவா? ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம். ஒரு பொய்யை மறைக்க ஒன்பது சொல்லுதல் ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்லுதல். ஒரு முறை உண்பவன் யோகி, இரு முறை உண்பவன் போகி, மும்முறை உண்பவன் ரோகி. ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும். ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம். ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. ஒற்றுமையே பலம். ஒருவனாய் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை. ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று. ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா! ஒன்னே ஒன்னு, கண்ணே கண்ணு (என்று)....... ஒண்டவந்த பிடாரி ஊர்ப் பிடாரியை ஓட்டியதாம். ஓசை பெறும் வெண்கலம் ஓசை பெறா மட்கலம். ஒய்யாரக்கொண்டையாம் தாழம்பூவாம் அதனுள்ளே இருக்குமாம் ஈறும் பேனும். ஓ ஓங்கி அறைந்தால் ஏங்கி அழ சிவன் இல்லை. ஓடி ஒரு கோடி தேடுவதிலும், இருந்து ஒரு காசு தேடுவது நலம். ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி. ஓடி வரும் பூனை ஆடி வரும் ஆனை. ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு. ஓடுகிற ஓணானை இடுப்பில் கட்டிக்கொண்டு, குத்துதே குடையுதே என்றானாம்.... ஓட்டம் உள்ளவரை ஆட்டமும் அதிகம்! ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி. ஓட்டை பானையிலும் சர்க்கரை இருக்கும் ஓணான் வேலிக்கு இழுக்கிறது; தவளை தண்ணீருக்கு இழுக்கிறது! ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம். ஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே. ஓர் ஊருக்கு ஒரு வழியா? ஒன்பது வழி. ஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு. ஔ ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை. க கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆகுமா? கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை. கடலுக்குக் கரை போடுவார் உண்டா? கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை. கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது? கடல் திடலாகும், திடல் கடலாகும். கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா? கடல் வற்றினால் கருவாடு தின்னலாம் என்று உடல் வற்றி செத்ததாம் கொக்கு! கடலாழம் கண்ட பெரியோர்க்கும் பெண்கள் மன ஆழம் காணலரிது! கடவுளை நம்பினோர் கைவிடப் படார். கடன் இல்லா கஞ்சி கால் வயிறு. கடன் வாங்கிக் கான் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கைவிட்டனும் கெட்டான். கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி. கடன் பட்டார் நெஞ்சம் போல... கத்தி எடுத்தவன் கத்தியாலேயே சாவான். கடமையைச் செய் பலனை எதிர்பாராதே. கடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை. கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும். கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா? கடுகு போன இடம் ஆராய்வார், பூசணிக்காய் போன இடம் தெரியாது. கடுகு களவும் களவுதான், கற்பூரம் களவும் களவு தான். கடுங்காற்று மழை கூட்டும் கடுஞ் சிநேகம் பகை கூட்டும். கடுஞ் சொல் தயவைக் கெடுக்கும். கடை காத்தவனும் காடு காத்தவனும் பலன் அடைவான். கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பது போல. கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறது. கட்டக் கரிய இல்லாமற் போனாலும் பேர் பொன்னம்மாள். கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும். கட்டினவனுக்கு ஒரு வீடானால் கட்டாதவனுக்கு பல வீடு. கட்டின வீட்டுக்கு எட்டு வக்கனை. கணக்கன் கணக்கறிவான் தன் கணக்கைத் தான் அறியான். கணக்கன் கணக்கைத் தின்னாவிடில், கணக்கனை கணக்கு தின்று விடும். கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும். கண் உள்ள போதே காட்சி; கரும்பு உள்ள போதே ஆலை! கண் கண்டது கை செய்யும். கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா? கண்டதே காட்சி கொண்டதே கோலம். கண்டது சொன்னால் கொண்டிடும் பகை. கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு. கண்டால் காமாட்சி, காணாவிட்டால் மீனாட்சி. கண்டதைத் தின்றால் பலவான் ஆகலாம். கண்ணடிச்சு வராத பொம்பள கையப்படிச்சு இழுத்தா வரவா போறா? கண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ? கண்ணிற் பட்டால் கரிக்குமா, புருவத்திற் பட்டால் கரிக்குமா? கண்ணிற் புண் வந்தால் கண்ணாடி பார்த்தல் ஆகாது. கண்ணைக்கட்டி காட்டில் விட்டாற்போல! கண்ணு சிறுசு, காண்பதெல்லாம் பெரிசு. கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் , தீர விசாரிப்பதே மெய். கண்ணாடி வீட்டிலிருந்து கல் எறிந்தாற் போல கத்தரிக்காய் சொத்தை என்றால் அரிவாள்மணை குற்றம் என்கிறாள். கத்தரிக்காய் முற்றினால் கடைத் தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும். கதிரவன் சிலரை காயேன் என்குமோ? கந்தனுக்குப் புத்தி கவட்டுக்குள்ளே கந்தையானாலும் கசக்கிக் கட்டு. கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றா விடியும். கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே. கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி. கப்பற்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு. கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்! கம்பால் சாய்க்காதவனைக் கயிற்றால் சாய்த்த கதையாக. கரணம் தப்பினால் மரணம். கரிவிற்ற பணம் கறுப்பாய் இருக்குமா? கருப்பே அழகு காந்தலே ருசி! கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான். கரும்பு கசக்கிறது வாய்க் குற்றம் கரும்பு விரும்ப அது வேம்பாயிற்று. கரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாம்? கரும்பு தின்ன கூலி வேண்டுமா? கருத்த பார்ப்பனனையும், வெளுத்த சூத்திரனையும் நம்பாதே !? கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி! கல்லென்றாலும் கணவன், புல்லென்றாலும் புருசன். கல்லடிச் சித்தன் போனவழி, காடுமேடெல்லாம் தவிடுபொடி. கல்லாடம் [ ஒரு நூல்] படித்தவனோடு மல் ஆடாதே. கல்லாதவரே கண்ணில்லாதவர். கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம். கல்லடி பட்டாலும் கண்ணடி படாதே!! கல்வி அழகே அழகு. கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு. கல்விக்கு இருவர், களவுக்கு ஒருவர். கல்யாணம் ஆயிரம் காலத்துப் பயிர். கவலை உடையோர்க்குக் கண்ணுறக்கம் வராது. கழுவுகிற நீரில் நழுவுகிற மீன் போல. கழுதை கெட்டால் குட்டிச் சுவர். கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை கழுதைக்கு உபதேசம் காதில் ஓதினாலும் அபயக் குரலே குரல். களவுக்குப் போறவன் தும்பக் கூடாது, கடை வச்சவன் தூங்கக் கூடாது. களவும் கற்று மர ( இது 'களவும் கத்தும் மற' என்பதன் திரிந்த பழமொழி) களவும் கத்தும் மற களவையும் சூதாட்டத்தையும் மறந்துவிடு என்பது பொருள். களை பிடுங்காப் பயிர் காற்பயிர். கள் குடித்த குரங்கு போல ... கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல். கள்ள மனம் துள்ளும். கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியு மட்டும் திருடலாம். கள்ளம் பெரிதோ? காப்பு பெரிதோ! கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்! கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்லுவான். கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே. கள்ளுக்கும் காமத்துக்கும் கண்ணில்லை! கறையான் புற்று பாம்புக்கு உதவுகிறது. கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு. கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு. கன்றுக்குட்டிக்குத் தெரியுமா, கவணையுடைய உயரம்? கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா? கனிந்த பழம் தானே விழும். கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு. கற்பில்லாத அழகு, வாசனை இல்லாத பூ. கடமை கண் போன்றது கல்யாணம் பண்ணி பார் வீட்டை கட்டி பார் கா காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும் அது காற்றைப் போல பறக்கவும் வேண்டும். காஞ்சிபுரம் போனா காலாட்டி சாப்டலாம். காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான். காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும். காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும். காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா? காண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா? காணி ஆசை கோடி கேடு. காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம் காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே. காதோரம் நரைத்த முடி கதை முடிவை காட்டும். காகம் திட்டி மாடு சாகாது. காகம் வழி காட்டினால் செத்த நாயிடம் சேர்க்கும். காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு. காக்காய் உட்கார பனம் பழம் விழுந்தாற் போல. காகிதப்பூ மணக்காது. காப்பு சொல்லும் கை மெலிவை. காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம். காய்த்த மரம் கல் அடிபடும். காய்ந்தும் கெடுத்தது பெய்தும் கெடுத்தது. காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் விழுந்த மாதிரி.. காரண குருவே காரிய குரு! காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி. காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ? கார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை காலம் பிழைத்தால் கறுத்தார் என்ன செய்ய முடியும் ? காலமும் கடல் அலையும் எவருக்கும் காத்திரா. காலம் செய்கிறது ஞாலம் செய்யாது. காலம் பொன் போன்றது காலம் போம் வார்த்தை நிற்கும், கப்பல் போம் துறை நிற்கும் காலத்துக்கு ஏற்றபடி பெருச்சாளி காவடி எடுத்து ஆடிற்றாம்! காலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம், நூலளவே ஆகுமாநுண்சீலை. காலணாக் கொடுத்து அழச் சொன்னாளாம், நாலணாக் கொடுத்து ஓயச் சொன்னாளாம். காலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க உழைப்பும். காலைக் கல்; மாலைப் புல். ("காலை நேரத்தில் கல்லின் மேல் உட்காரலாம்; குளிர்ச்சியாக இருக்கும். மாலை நேரத்தில் கல்லின் மேல் உட்கார்ந்தால் சுடும். காலை நேரத்தில் புல்லின் மேல் உட்கார்ந்தால் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். மாலை நேரத்தில் புல்லின் மேல் அமர்ந்தால் இதமாக இருக்கும்" என்று சிலர் பொருள் கூறுவார்கள்; மாறாக, வேறு ஒரு பொருளும் கூறுவர். காலையில் கற்க வேண்டும். அப்போது மனம் அமைதியாக இருந்து கல்வியை ஏற்கத் தயாராக இருக்கும். காலை என்பது அதிகாலை 4 மணிக்கும் மேல்; அப்போது கற்கும் கல்வி கல்வெட்டு போல் மூளையில் பதியும். "இளமையில் கல்வி சிலைமேல் எழுத்து' என்பது கல்வி பற்றிய ஒரு பழமொழி. "மாலைப் புல்" என்பதற்கு, மாலை நேரம் இன்பத்தை அனுபவிப்பதற்கு ஏற்ற நேரம் என்று கூறுவர். (புல்-புல்லுதல்-இன்பம் அனுபவித்தல்). இது பவணந்தியார் என்ற இலக்கண ஆசிரியர் கருத்து. (காலைக் கல்; மாலைப் புல்!, தமிழ்மணி, 12 பிப் 2012) காலை வெய்யில் காலன், மாலை வெய்யில் மருந்து. காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும் காவலுக்கு பொம்மை இருக்கேன்னு நம்பி களம் நிறைய நெல்லு காய வச்சாங்களாம்! காற்றில்லாமல் தூசி பறக்குமா? காற்று உள்ளபோதே தூற்றிக்கொள். காற்றுக்கு எதிர்லே துப்பினால் முகத்தில் விழும். காட்டுப் பூனைக்குச் சிவராத்திரி விரதமா? கி கிடந்த கிடைக்கு நடந்த நடை மேல்! கிட்டாதாயின் வெட்டென மற கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான். கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்? கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டுபோகாது. கீ கிரீடத்தை பிடிக்க, கிராமத்தை பிடி கீர்த்தியால் பசி தீருமா? கீறி ஆற்றினால் புண் ஆறும். கிரீடம் அரசனுக்கு மட்டுமே சொந்தம். கு குங்குமம் சுமந்த கழுதை மணம் அறியுமா? குசவனுக்கு ஆறுமாதம் தடிகாரனுக்கு அரை நாழிகை. குஞ்சுக் கோழி ஆனாலும் குனிந்து அறுக்க வேண்டும் குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும். குடி குடியக் கெடுக்கும். குடி, சூது, விபசாரம் குடியைக் கெடுக்கும். குடி வைத்த வீட்டிலே கொள்ளி வைக்கலாமா? குடிகாரன் பேச்சு பொழுது விடிந்தால் போச்சு. குட்டக்குட்ட குனியாதே.. குட்டி யானையும் குட்டயக் கலக்கும். குற்றமுள்ள நெஞ்சு குறுகுறு என்னும். குடும்பத்தில் இளையவனும் கூத்தாடியில் கோமாளியும் ஆகாது. குட்டி செத்தா குடியா முழுகப்போகுது? குட்டுப் பட்டாலும் மோதுகிற கையால் குட்டுப்படவேண்டும். குடியைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பு. குண்டி கொள்ளாம கோவணம் கட்டுனாப்ல. குணத்தை மாற்றக் குருவில்லை. குணம் இல்லா வித்தை எல்லாம் அவித்தை. குணம் பெரிதேயன்றிக் குலம் பெரியதன்று. குதிரை இருப்பு அறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள். குதிரை ஏறாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது. குதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை. குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும். குப்பை உயரும் கோபுரம் தாழும். குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா? கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கு. குப்புறவிழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்றானாம். குமரி ஒற்றையில் போனாலும் கொட்டாவி ஒற்றையில் போகாது. குரங்கின் கைப் பூமாலை. குரங்கு கையில் பூமாலை கொடுத்தாற் போல.... குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணாங்குருவி கூண்டு இழந்தது. குரங்கிடம் மூத்திரம் கேட்டால் அது கொப்புக்கு கொப்புத் தாவுமாம். குரங்கு சுன்னியை மருந்துக்கு கேட்டால் அது கொம்புக்கு கொம்புக்கு தாவுமாம்! குரு இல்லார்க்கு வித்தையுமில்லை முதல் இல்லார்க்கு ஊதியமில்லை. குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மையிட்டுமென்ன? குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான். குருவிக்கேத்த ராமேஸ்வரம்.குரைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா? இது 'குறி வைக்க ஏற்ற ராம சரம்' என்பதன் திரிந்த வழக்கு குரைக்கிற நாய் கடிக்காது; கடிக்கிற நாய் குரைக்காது. பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே குலவித்தை கற்றுப் பாதி கல்லாமற் பாதி. குல வழக்கம் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது. குலத்தைக்கெடுக்கவந்த கோடாலிக்காம்புபோல குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே. குழந்தையை கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டிவிட்டாற் போல.... குறி வைக்க ஏற்ற ராம சரம் குறைந்த வயிற்றிற்கு கொள்ளுமாம் பலாக்காய் குறைகுடம் ததும்பும், நிறைகுடம் ததும்பாது. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறு என்கும். குறும்பியுள்ள காது தினவு கொள்ளும் குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. குந்தித் தின்றால் குன்றும் மாளும்! குனிய குனியத்தான் குட்டு விழும். குண்டுமணிக்குத் (குன்றிமணி) தெரியாதாம் தன் குண்டி கருப்பென்று. கும்பி எரியுது, மீசைக்கு சம்பங்கி எண்ணெய்யா? கும்பி கூழுக்கு அழுததாம், மீசை சம்பங்கி எண்ணெய் கேட்டதாம். கும்பிடபோன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி........ கூ கூடி வாழ்ந்தால் கோடி நன்மை கூத்தாடி கிழக்கே பார்த்தான் , கூலிக்காரன் மேற்கே பார்த்தான். கூத்தாடி பெண்ணுக்கு சூதாடி கணவன் கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம். கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே? கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குத் தேங்காய் கொண்டாட்டம். கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை. கூழும் சிந்தல, கோப்பையும் உடையல கூழானாலும் குளித்துக் குடி. கூலி கால் பணம், சுமை கூலி முக்கால் பணம். கூடாநட்பு கேட்டில் முடியும். கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போவானா ? (மயில் பிடிப்பானா?) கெ கெடுக்கினும் கல்வி கேடுபடாது கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது கெடுவான் கேடு நினைப்பான் கெட்டாலும் செட்டி செட்டியே, கிழிந்தாலும் பட்டு பட்டே. கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே, சங்கு சுட்டாலும் வெண்மை தரும். கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும். கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு. கெட்டும் பட்டணம் சேர் கெண்டையைப் போட்டு வராலை இழு. கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான். கெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கல்ல. கே கேடு வரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே. கெடுவான் கேடு நினைப்பான். கேட்டதெல்லாம் நம்பாதே! நம்பியதெல்லாம் சொல்லாதே! கேட்பார் இல்லாவிட்டால் தம்பி சண்டபிரசண்டனாம்! கேழ்வரகில் நெய் வடிகிறதென்றால் கேட்பவனுக்கு மதி வேண்டாவா? கேழ்வரகில் நெய் வழிகிறது என்றால், கேட்பவனுக்கு மதி,சுதி எங்கே போனது? கேளும் கிளையுங் கெட்டோர்க்கு இல்லை. கேள்விப் பேச்சில் பாதிதான் நிசம். கேள்விப் பேச்சு மூளா நெருப்பு கை கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை/கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாததைப்போல கைக்கோளனுக்குக் காற்புண்ணும் நாய்க்குத் தலைப்புண்ணும் ஆறா கைத் துப்பைக் கொண்டு காரியம் இல்லை; வாய்த் துப்பைக் கொண்டு வாழ வந்தேன் கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா? இது 'கைப்பூணுக்குக் கண்ணாடி வேண்டுமா?' என்பதன் திரிந்த வழக்கு கைப்பூணுக்குக் கண்ணாடி வேண்டுமா?கைப்பொருளற்றால் கட்டினவளும் பாராள் கையில் உள்ள பூண் அல்லது காப்பைப் பார்க்கக் கண்ணாடி தேவையில்லை கையாளத ஆயுதம் துருப்பிடிக்கும் கையிலே காசு வாயிலே தோசை கையில் உண்டானால் காத்திருப்பார் ஆயிரம் பேர். கையூன்றிக் கரணம் போடவேண்டும். கையில் பிடிப்பது துளசி மாலை, கக்கத்தில் இடுக்குவது கன்னக்கோலாம் கொ கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா? கொஞ்சம் கொஞ்சமாக் குடைஞ்சா குடகு மலையையும் குடைஞ்சிடலாம் கொடிக்கு காய் கனமா? கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம். கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது. கொடுங்கோலன் ஆட்சியிலே அம் என்றால் சிறை வாசம், உம் என்றால் வனவாசம். கொடுத்தைக் கேட்டால் அடுத்த தாம் பகை. கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சியா? கொண்டானும் கொடுத்தானும் ஒன்று,கலியாணத்தைக் கூட்டி வைத்தவன் வேறு. கொண்டவன் சரியா இருந்தா கூரெ ஏறிக்கூட சண்டெ போடலாம் கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சான். கொல்லன் தெருவில் ஊசி விலைபோமா? கொல்லைக் காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா? கொழுத்தவனுக்கு கொள்ளு... இளைத்தவனுக்கு எள்ளு! கொள்ளிக்கு எதிர்போனாலும், வெள்ளிக்கு எதிர்போகலாகாது. கொள்ளும் வரைக்கும் கொண்டாட்டம் , கொண்ட பிறகு திண்டாட்டம் . கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன். கொண்டுவந்தால் தந்தை, கொண்டுவந்தாலும் வராவிட்டாலும் தாய்,சீர் கொண்டுவந்தால் சகோதரி,கொலையும் செய்வாள் பத்தினி, உயிர் காப்பான் தோழன். கொன்றால் பாவம், தின்றால் போகும். கொசு அடிக்க கோடரி வேண்டுமா? கோ கோட் சொல்பவைக் கொடுந்தேள் என நினை. கோட் சொல்லும் வாய் காற்றுடன் நெருப்பு. கோடாலிக்காம்பு குலத்துக்கு ஈனம் கோடி வித்தையும் கூழுக்குத்தான் கோணிகோடி கொடுப்பதிலும் கோணாமற் காணி கொடுப்பது நல்லது. கோத்திரமறிந்து பெண்ணைக்கொடு, பாத்திரமறிந்து பிச்சையிடு. கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு. கோபம் சண்டாளம். கோபுரம் தாண்டுகிற குரங்குக்கு குட்டிச் சுவர் என்ன பிரமாதம்! கோபுர தரிசனம் கோடி புண்ணியம். கோயிற் பூனை தேவர்க்கு அஞ்சுமா? கோல் உயரக் குடி உயரும். கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா? கோளுஞ் சொல்லி கும்பிடுவானேன்? கோடானுகோடி கொடுப்பினும் தன்னுடைய நாக்கு கோடாமை கோடி பெறும் கோடானுகோடி கொடுத்தாலும் நாவினால் தவறு சொல்லாதது கோடி பெறும். கோடி கொடுப்பினும் குடில் பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடி பெறும். கோழிக்கு வேலை கூவுறது, கொழுக்கட்டைக்கு வேலை வேகறது கோயிலில்லா ஊரிலே குடியிருக்கலாகாது கோவிலை கட்டிப்பார், குளத்தை வெட்டிப்பார். ச சங்கு ஆயிரம் கொண்டு வங்காளம் போனால், பொன்பாளம் வந்தாலும் வரும்; மண்பாளம் வந்தாலும் வரும்! சண்டிக் குதிரை நொண்டிச் சாரதி சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்? சட்டியில் உணவோ அல்லது சாறோ இருந்தால்தானே அகப்பையில் வரும் என்று பொருளில் சொல்லப்பட்டாலும், உண்மையில் குழந்தைப்பேறு இல்லாதவர்கள் கந்தர் சஷ்டி விரதம் இருந்தால் அகப்பையான கர்ப்பப்பையில் குழந்தை வரும் என்று குறிப்பிட வழங்கப்பட்ட பழமொழி சத்தியமே வெல்லும், அசத்தியம் கொல்லும். சனியைப்போல கொடுப்பவனுமில்லை, சனியைப்போல கெடுப்பவனுமில்லை! சந்தியிலே அடித்ததற்குச் சாட்சியா? சபையிலே நக்கீரன் அரசிலே விற்சேரன். சமத்தி சந்தைக்குப்போனாலாம் வட்டி கிண்ணியாச்சாம். சம்பளம் இல்லாத சேவகனும், கோபமில்லாத எசமானும் சருகைக் கண்டு தணலஞ்சுமா. சர்க்கரை என்றால் தித்திக்குமா? சா சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் அளவு. சாகிறவரைக்குவஞ் சங்கடமானால் வாழுகிறது எக்காலம்? சாகிறவரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன். சாட்சிக்காரன் காலில் விழுவதிலும் சண்டைக்காரன் காலில் விழலாம். சாட்டை இல்லாப் பம்பரம் ஆட்டிவைக்க வல்லவன். சாது மிரண்டால் காடு கொள்ளாது. சாத்திரம் பாராத வீடும் சமுத்திரம் பார்த்த வீடும் தரித்திரம். சாத்திரம் பொய் என்றால் கிரகணத்தைப் பார். சாப்பிள்ளை பெற்றாலும் மருத்துவச்சிக் கூலி தப்பாது. சாகத்துணிந்தவனுக்கு வெள்ளம் தலை மேல் சாண் பொனாலென்ன? முழம் போனாலென்ன? சாண் பிள்ளையானாலும்,ஆண் பிள்ளை. சாண் ஏற முழம் சறுக்குகிறது. சி சிங்காரக்கொண்டையாம் தாழம்பூவாம் அதனுள்ளே இருக்குமாம் ஈறும் பேனும். சித்தன் போக்கே சிவன் போக்கு. சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம். சித்திரை மாதத்து உழவு... பத்தரை மாற்றுத் தங்கம் சித்திரையில் செல்வ மழை. சின்ன மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடி. சின்ன நாய எறண்டுவானேன் செருப்படி வாங்குவானேன். சிரிக்கிற பெண்ணையும், அழுகிற ஆணையும் நம்பாதே! சிரைத்தாலும் தலையெழுத்து அழியாது/போகாது! சிவபூசையில் கரடி புகுந்தாற் போல! சிறியோரெல்லாம் சிறியோரல்ல, பெரியோரெல்லாம் பெரியோருமல்ல. சிறுதுளி பெரு வெள்ளம். சிறுதுரும்பும் பல் குத்த உதவும். சிறுக சேர்த்து (கட்டி) பெருக வாழ். சு சுக துக்கம் சுழல் சக்கரம். சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை,சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை! சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும். சுட்ட சட்டி அறியுமா சுவை. சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டுமா? சுண்டைக்காய் காற்பணம் சுமை கூலி முக்காற்பணம். சுத்தம் சோறு போடும் எச்சில் இரக்க வைக்கும். சுத்த வீரனுக்கு உயிர் துரும்பு. சும்மா வந்த மாட்டை பல்லைப் பிடித்தப் பாராதே சும்மா கொடுத்த மாட்டை பல்லை பிடித்து பதம் பார்த்தானாம். சும்மா இருக்கிற தம்பிரானுக்கு இரண்டு பட்டை. சும்மா கிடக்கிற சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி. (சும்மா கிடக்குற சங்க ஊதி கெடுத்தானாம் பண்டாரி) சும்மா மெல்லும் வாய்க்கு அவல் கிடைத்தாற் போல....... சுயபுத்தி போனாலும் சொற்புத்தி வேண்டாமா? சுவர் இருந்தாதானெ சித்திரம் வரெய முடியும். சுவரை வைத்துதான் சித்திரம் வரையவேண்டும். சூ சுவாமி வரங் கொடுத்தாலும் பூசாரி இடங்கொடுக்க மாட்டான்.(வரம் கொடுக்க மாட்டான்) சூடு கண்ட பூனை அடுப்படிக்கு செல்லாது. சூடு மண்ட பூனை பாலை குடிக்காது. சூதும் வாதும் வேதனை செய்யும். செ செக்களவு பொன்னிருந்தாலும் செதுக்கியுண்டால் எத்தனை நாளுக்குக் காணும்.? செடியிலே வணங்காததா மரத்திலே வணங்கும்? செட்டி மிடுக்கோ சரக்கு மிடுக்கோ? செட்டியார் வாழ்வு செத்தால் தெரியும். செத்தவன் உடைமை இருந்தவனுக்கு அடைக்கலம். செத்த அன்றைக்கு வா என்றால் பத்து அன்றைக்கு வந்தானாம். செத்தும் கொடுத்தான் சீதக்காதி. செய்வன திருந்தச் செய். செருப்பின் அருமை வெயிலில் தெரியும், நெருப்பின் அருமை குளிரில் தெரியும். செருப்புக்காகக் காலைத் தறிக்கிறதா? செருப்புக்கேற்றபடி காலை வெட்டுவரா? செல்லமுத்துன வாழக்காய் புளியில்லாம அவிஞ்சுச்சாம். செல்லுமிடம் சினம் காக்க. செலவில்லாச் செலவு வந்தால் களவில்லாக் களவு வரும். சென்ற இடம் எல்லாம் சிறப்பே கல்வி. செவிடன் காதில் சங்கு ஊதினால் போல! செய்தவன் மனம் குன்றினால் ஐவினைப் பயனும் கெடும். செய்யும் தொழிலே தெய்வம். சேராத இடத்திலே சேர்ந்தால் துன்பம் வரும். சே சேலையில் முள் விழுந்தாலும் முள்ளில் சேலை விழுந்தாலும் சேதம் சேலைக்குத்தான். சேலை கட்டிய மாதரை நம்பாதே ! சேற்றிலே புதைந்த யானையைக் காக்கையுங் கொத்தும். சேற்றிலே செந்தாமரை போல. சை சைகை அறியாதவன் சற்றும் அறியான். சொ சொந்தக் காசில் சூனியம் வெச்சிக்கறது போல. தவறு என்று நன்குத் தெரிந்தாலும், தனக்கு தனிப்பட்ட உபயோகம் ஒன்றுமில்லை என்றுத் தெரிந்தும் ஒரு காரியத்தைச் செய்ய முற்பட்டு தேவையற்ற/வீணான ஆபத்து, வம்பு தும்பு, சண்டை, சச்சரவு அகியவைகளில் சிக்கித் தவிப்பதைக் குறிக்கும் பழமொழி... சொத்து பெரிசில்ல சொல்லுதான் பெரிசு சொப்பனங் கண்ட அரிசி சோற்றுக்காகுமா? சொல் அம்போ வில் அம்போ? சொல்லாது பிறவாது அள்ளாது குறையாது. சொல்லாமற் செய்வார் நல்லோர் சொல்லியுஞ் செய்யார் கசடர். சொல்லிப் போகவேணும் சுகத்திற்கு, சொல்லாமற் போகவேணும் துக்கத்திற்கு. சொல்லுகிறவனுக்கு வாய்ச்சொல் , செய்கிறவனுக்கு தலைச்சுமை. சொல்வல்லவனை வெல்லல் அரிது. சொறிந்து தேய்க்காத எண்ணெயும் பரிந்து இடாத சோறும் பாழ். சொற்கோளாப் பிள்ளையினால் குலத்துக்கீனம். சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை. சோ சோம்பலே சோறு இன்மைக்குப் பிதா. சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடே.. சோறு கண்ட எடம் சொர்க்கம் திண்ண கண்ட எடம் தூக்கம். சோற்றுக்குக் கேடு பூமிக்குப் பாரம். சோழியன் குடுமி சும்மா ஆடாது! த தங்க ஊசி என்பதற்காக கண்ணைக் குத்திக்கொள்வரா? தங்கம் தரையிலே தவிடு பானையிலே. தங்கக்குடத்திற்கு சந்தனமென்ன? பொட்டென்ன? ஏற்கனவே மிகச்சிறந்த விடயங்களுக்கு, அலங்காரம் தேவையில்லை என்னும் பொருள்... தஞ்சம் என்று வந்தவனை வஞ்சித்தல் ஆகாது. தடி எடுத்தவன் தண்டல்காரனா ? தட்டத் தட்ட தட்டான், படிக்க படிக்க வாத்தியாரு. தட்டானுக்குப் பயந்தல்லவோ பரமசிவனும் அணிந்தான் சர்ப்பத்தையே. தட்டாரத் தம்பியிலும் நல்ல தம்பி உண்டோ ? தட்டிப்பேச ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன். தணிந்த வில்லுத்தான் தைக்கும். தண்ணீரிலே விளைந்த உப்புத் தண்ணீரிலே கரைய வேண்டும். தண்ணீரையும் தாயையும் பழிக்காதே. தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும் . தந்தை எவ்வழி புதல்வன் அவ்வழி. தந்தையோடு கல்விபோம்; தாயோடு அறுசுவை உண்டிபோம்.(பெற்றோர் தரும் கல்வியும், உணவுமே சிறந்தவை) தந்தை சொல் மிக்கதொரு மந்திரமில்லை. (அப்பா கூறும் அறிவுரைகளே, அறங்களில் உயர்ந்தவை ஆகும்.) தம்பி உடையான் படைக்கு அஞ்சான். தரித்திரனுக்கு பவிசு (வாழ்வு) வந்தால் அர்த்த இராத்திரியில் குடை பிடிப்பான். தருமம் தலைகாக்கும். தலை இடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும். தலை இருக்க வால் ஆடலாமா ? தலையைப் பார்த்து கல்லைப் போடு! கல் என்பது தோசைக்கல்லைக் குறிக்கும்..தலை என்பது ஆள்/நபர்...சாப்பிட ஆள் இருந்தால் மட்டுமே கல்லைப் போட்டு தோசை சுடு அதாவது தேவை/அவசியம் இல்லாமல் செலவு செய்யாதே என்னும் பொருள்... தலைக்கு மேல் வெள்ளம் சாண் ஓடி என்ன, முழம் ஓடி என்ன ? தலை எழுத்தை தந்திரத்தால் வெல்லலாமா? தலெ எழுத்து தலெய செரச்சா போவுமா? தலை தப்பியது, தம்பிரான் புண்ணியம்! தலையாரியும் அதிகாரியும் ஒன்றானால் சம்மதித்தபடி திருடலாம். தலைக்கு மிஞ்சினால்தான் தானமும், தருமமும். தலைவலி போய் திருகுவலி வந்ததாம்! ஒரு பிரச்சினையை மிகுந்த சிரமப்பட்டு போக்கிக்கொள்ளும்போது நம்மை அறியாமலேலே மற்றொரு பெரிய பிரச்சினையை எதிர்கொள்ளவேண்டிய சூழ்நிலை வரும்போது பயன்படுத்தப்படும் பழமொழி...ஒரு பிரச்சினையை வெகு எச்சரிக்கையாக பின்/எதிர் விளைவுகளை யோசித்துக் கையாளவேண்டும் என்பதை உணர்த்தும்... தனக்கு மிஞ்சியது தான் தானமும் தருமமும். தவத்துக்கு ஒருவர் கல்விக்கு இருவர். தவளை தன் வாயாற் கெடும். தவிட்டுக்கு வந்த கை தங்கத்துக்கும் வரும் தன் பலம் கண்டு அம்பலம் ஏற வேண்டும்! தன் வினை தன்னைச் சுடும் ! தன்னூர் கிழக்கே, தங்கினவூர் மேற்கே, வேண்டாம் தெற்கும், வடக்கும். ஒருவர் தூங்கும்போது எந்தத் திசையில் தலையை வைத்துத் தூங்கவேண்டும் என்பதைக் குறிப்பிடுகிறது... தலகாணி மந்திரம் குடியைக் கெடுக்கும். தனக்கு தனக்கு என்றால் புடுக்கும் களை வெட்டுமாம்!! தனக்கு தவிடு இடிக்க மாட்டான், வூருக்கு இரும்பிடிப்பான். தனக்கு வந்தால்தான் தெரியும் தலைவலியும், திருகுவலியும். தன் நாற்றமும் பெண்டாட்டி நாற்றமும் தெரியாது! தன்னைக் கொல்ல வந்த பசுவையும் கொல்(லு)! தாயில் சிறந்த கோயில் இல்லை. தா தாட்சண்யம் தன நாசம். தாண்டி குதிக்குமாம் மீனு. தயாரா இருக்குமாம் எண்ணெய் சட்டி! தாயும், மகளுமே யானாலும் வாயும் வயிறும் வேறு, வேறுதான்! என்னதான் நெருக்கமாகவும், அன்னியோன்னியமாகவும் இருந்தாலும் அவரவர் தேவைகள் வேறுவேறானவை/ மாறுபட்டவை...ஒருவர் தன்பசிக்கு உணவு உண்டால் மற்றவர் வயிறு நிறைந்து அவர் பசி அடங்காது என்றுப்பொருள்... தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும். தாய்க்குப்பின் தாரம். தாய்வீடு ஓடிய பெண்ணும் பேயோடு ஓடிய கூத்தும் ஒன்று. தாயில்லா தகப்பன் தாயாதி. தாயை இழந்த பிள்ளைகளுக்கு தகப்பன் இருந்தும் பயனில்லை...அவன் பட்டும் படாமலிருக்கும் தாயாதிகளைப் போன்றவனே!...ஒரு தாயைப்போல ஊணூட்டி, தேவைகளைக் கவனித்து நிறைவேற்றி, அவர்கள்பால் அம்மாவைப்போல அக்கறையும், அன்பும், ஆதரவும், கவனமும் கொண்டவனாக இருக்கமாட்டான் என்பதே இப்பழமொழி சொல்லும் உண்மையாகும் தாயிற் சிறந்ததோர் கோவிலுமில்லை. (அம்மாவை விட, சிறந்த தெய்வம் எங்கும் இல்லை) தாயைப் பார்த்து பெண்ணை கொள். தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை. தாயோடு அறுசுவை உணவு போம். தார் புறப்பட்டு தாய் வாழைய கெடுத்தாப்ல. தாராளம் தண்ணி பட்டபாடு நீராரம் நெய் பட்டபாடு. தாழ்ந்து நின்றார் வாழ்ந்து நிற்பார். தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும். தான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும். தான் சாகணும் சுடுகாடு பார்க்கணும். தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் என்பான்! தன் வூட்டு நெருப்புன்னு முத்தம் கொடுக்க முடியுமா? தானத்தில் சிறந்தது நிதானம். தானா பழுக்குறத தடி கொண்து அடிக்கணுமா? தானே கனியாதக் காயைத் தடிக்கொண்டு அடித்தாலா கனியும்? தானம் கொடுத்த மாட்ட பல்லப்புடுச்சு பதம் பாத்த கதெயா. தானிருக்கும் அழகுக்குத் தடவிக்கொண்டாளாம் வேப்பெண்ணெய். தி திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்! திருவாரூரு தேவடியாள் தேர்ந்த கைக்காரி, பாலில்லாம புள்ளை வளர்ப்பாள் பலே கைக்காரி! திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு (சேர்) திருப்பதியில் மொட்டையனைத் தேடினாற்போல.... திருடனுக்கு தேள் கொட்டினாற் போல... திருடனுக்கு இருட்டு உதவுவதைப் போல... திண்ணைத்தூங்கி முண்டத்துக்கு பன்னீர்கண்ட மீசையாம்! தில்லிக்கு ராஜாவானாலும் தாய்க்கு பிள்ளைதான். தின்ன மனசு தேடுமாம், உண்ண உடம்பு உருகுமாம். தேளுக்கு இடம் கொடுத்தால் நொடிக்கு நொடி கொட்டுமாம்!.. தேளுக்கு மானியம் கொடுத்தா நொடிக்கு நூறுதடவ கொட்டுமாம். தீ தீட்டிய மரத்திலேயே கூர் பார்ப்பதைப்போல! தீதும் நண்றும் பிறர் தற வாரா து துடைப்பக் கட்டைக்குப் பட்டுக் குஞ்சமா? துட்டு வந்து பொட்டியிலே விழுந்ததோ , திட்டு வந்து பொட்டியிலே விழுந்ததோ? துட்டனைக் கண்டால் தூர விலகு... துணிகிறவருக்கு வெட்கம் இல்லை; அழுகிறவருக்கு துக்கம் இல்லை. துணியாதே , படபடப்பாகச் செய்யாதே. துரும்பும் பல் குத்த உதவும். துறவிக்கு வேந்தனும் துரும்பு. தூ தூண்டிக்காரனுக்கு தக்க மேல கண்ணு. தூய மனதை திடுக்கிட வைத்தால் ஐயம் இல்லாமல் அனைத்தும் வரும். தெ தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டுமா? (கட்டியதாம்) தெரியாத தேவதைக்கு தெரிந்த பிசாசே மேல் தே தேங்கா தின்னது ஒருத்தன் தெண்டங் கட்டனது ஒருத்தன். தேன் எடுத்தவன் புறங்கையை நக்குவான். தேனெடுக்றது ஒருத்தன் பொறங்கைய நக்றது ஒருத்தன். தேளுக்கு கொடுக்கில் விஷம் தேவடியாளுக்கு உடம்பு பூராவும் விஷம், தை தை பிறந்தால் வழி பிறக்கும். தை மாதம் தரையும் குளிரும். தை மாதம் போட்ட விதை தண்ணீரில்லாமல் வளரும். தொ தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும். தோ தோடு தொலஞ்சா தேடமாட்டங்க, சொரை தொலைஞ்சா தேடுவாங்க. தோண்டக்குறுணி துக்க முக்குறுணி. ந நகத்தாலே கிள்ளுகிறதைக் கோடாரி கொண்டு வெட்டுகிறான். நக்குமங்கலம் நக்கி நாறமங்கலம் குடி போனாளாம்.. நடக்க அறியாதவனுக்கு நடுவீதி காத வழி. நடந்தவன் காலிலே சீதேவி, இருந்தவன் காலிலே மூதேவி நடந்தால் நாடும் உறவாகும், படுத்தால் பாயும் பகையாகும். நடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் பாயும் பகை. நட்டுவன் பிள்ளைக்குக் கொட்டிக் காட்ட வேண்டுமா ! நண்டு கொழுத்தால் வளையில் இராது, தண்டு கொழுத்தால் தரையில் இராது. நத்தையின் வயிற்றிலும் முத்துப் பிறக்கும். நம்ம ஊட்டு வெளக்குன்னு முத்தம் கொடுக்க முடியுமா? நம்புறவனுக்கு மகராசா நம்பாதவனுக்கு எமராசா. நமக்கு ஆகாததது நஞ்சோடு ஒக்கும். நமனுக்கு நாலு பிள்ளை கொடுத்தாலும் உற்றாருக்கு ஒரு பிள்ளை கொடுக்கமாட்டான். நமன் அறியாத உயிரும் நாரை அறியாத குளமும் உண்டோ? நமைச்சல் எடுத்தவன்தான் சொரிந்துக்கொள்ள வேண்டும்! நயத்திலாகிறது பயத்திலாகாது. நரம்பில்லாத நாக்கு நாலும் பேசும். நரிக்கு இடங்கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்டும். நரி எடம் போனா என்ன வலம் போனா என்ன நம்ம மெலெ விழுந்து புடுங்காம இருந்தா சரி. நரிக்கு கொண்டாட்டம் நண்டுக்குத் திண்டாட்டம். நரை திரை இல்லை, நமனும் அங்கில்லை. நல் இணக்க மல்லது அல்லற் படுத்தும். நல்லது செய்து நடுவழியே போனால், பொல்லாதது போகிற வழியே போகிறது. நல்ல வேளையில் நாழிப்பால் கறவாதது கன்று செத்துக் கலப் பால் கறக்குமா ? நல்லவன் என்று பெயர் எடுக்க நெடுநாட் செல்லும். நல்லவன் ஒரு நாள் நடுவே நின்றால் அறாத வழக்கும் அறும். நல்லவனா கெட்டவனா என்பது செத்தால்தான் தெரியும். நல்லா கீது உந்நாயம், மண்டைலகீது காயம். நல்லார் பொல்லாரை நடக்தையால் அறியலாம். நல்ல மாட்டுக்கு ஒரு அடி, நல்ல மனிதனுக்கு ஒரு சொல்(லு). நல்ல மாட்டிற்கு ஒரு சூடு, நல்ல மனிதனுக்கு ஒரு வார்த்தை. நதி மூலமும் ரிஷி மூலமும் ஆராயாதே. நம்பினார் கெடுவதில்லை ஆண்டவனை. நன்மை கடைபிடி. நா நா அசைய நாடு அசையும். நாக்க தாண்டினா நரகல். நாக்கிலே இருக்கிறது நன்மையும் தீமையும். நாடறிந்த பார்ப்பானுக்கு பூணூல் அவசியமா ? நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும். நாயைக் கண்டால் கல்லை காணோம், கல்லைக் கண்டால் நாயை காணோம். நாய் இருக்கிற சண்டை உண்டு. நாய்க்கு வேலையில்லை நிற்க நேரமும் இல்லை. நாய் விற்ற காசு குரைக்குமா? நாய ஏவுனா அது தான் வாலை ஏவுது. நாவால் பிறக்கும் நன்மையும் தீமையும். நாலாயிரம் இல்லையெனில் நம் பெருமான் இல்லை. வைணவச் சமயத்தினருக்கு நாலாயிர திவ்விய பிரபந்தம் என்னும் நூல் எவ்வளவு புனிதமான, முக்கியமான நூல் என்பதைத் தெரிவிக்கும் மொழி...நம்பெருமான் என்பது திருவரங்கத்தில் கோவில்கொண்டுள்ள, வைணவக்கடவுளான அரங்கனாதனைக் குறிக்கும்...திருவரங்கத்து அரங்கனாதனின் கோவிலே, வைணவர்களின் எல்லாக் கோயில்களிலும் முதலாவதாகும்... நாலாறு கூடினால் பாலாறு. நாளுக்குநாளு நகர்ந்ததடி அம்மா (டி). சொலவடை நாள் செய்வது நல்லார் செய்யார். நரம்பில்லா நாக்கு நாலும் பேசும். நாரதர் கலகம் நன்மையில் முடியும். நாற்பது வயதுக்குமேல் நாய் குணம். நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி. நாலு பேர் கூடற எடத்துல நல்ல வெளக்கு, விடிய விடிய இலுப்ப வெளக்கு. நாமொன்று நினைக்க தெய்வமொன்று நினைக்கும். நாதியற்ற கோவிலுக்கு நீதியற்ற பூசாரி. நான்கு பிள்ளை பெற்றவருக்கு நடுத்தெருவில் சோறு, ஒரு பிள்ளை பெற்றவருக்கு உறியில் சோறு. நி நித்தம் போனால் முத்தம் சலிக்கும். நித்திய கண்டம் பூரண ஆயுசு. நித்தியங் கிடைக்குமா அமாவாசை சோறு? நித்திரை சுகம் அறியாது. நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும். நிழலின் அருமை வெயிலிற் போனால் தெரியும். நிறை குடம் நீர் ததும்பாது. குறைகுடம் கூத்தாடும். நின்ற வரையில் நெடுஞ் சுவர், விழுந்த அன்று குட்டிச்சுவர். நீ நீ எதனால் அளக்கின்றாயோ அதனால் நீ அளக்கப்படுவாய்! நீந்த மாட்டாதவனை ஆறுகொண்டு போம். நீர் ஆழம் கண்டாலும் நெஞ்சு ஆழம் காண முடியாது. நீர் உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும். நீர் மேல் எழுத்து போல். நீரடிச்சு நீர் வெலகுமா? நீரானாலும் மோர், பேயானாலும் தாய். நீரில்லா நெற்றி பாழ். நீலிக்குக் கண்ணீர் இமையிலே. நீள நீளத் தெரியும் மெய்யும் பொய்யும். நு நுங்கு குடிச்சவன் ஓடிப்பொயிட்டானாம், குதம்பைய கடிச்சவன் மாட்டிக்கிட்டானாம். நுனிக்கொம்பில் ஏறி அடிக்கொம்பு வெட்டுவார்களா? நுணலும் தன் வாயால் கெடும். நூ நூல் கற்றவனே மேலவன். நூலளவே யாகுமாம் நுண்ணறிவு. நூற்றுக் மேல் ஊற்று, ஆயிரத்துக்கு மேல் ஆற்றுப் பெருக்கு. நூற்றைக் கொடுத்தது குறுணி. நெ நெய் முந்தியோ திரி முந்தியோ. நெய்யை உருக்கியுண், நீரைச்சுருக்கியுண், மோரைப்பெருக்கியுண். நெய்யை உருக்கு, தயிரை பெருக்கு, உண்டியை சுருக்கு. நெருப்பின்மீது ஈ மொய்க்குமா? நெருப்பில்லாமல் புகையாது! நெருப்பில்லாம பொகயுமா? நெருப்பு இல்லாமல் நீள் புகை எழும்புமா? நெருப்பு என்றால் வாய்வெந்து போமா? நெருப்புப் பந்திலிலே மெழுகுப் பதுமை ஆடுமோ? நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் பாயும். நேற்று உள்ளார் இன்று இல்லை. நை நைடதம் புலவர்க்கு ஒளடதம். நொ நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு. நொறுங்கத் தின்றால் நூறு வயது. நோ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். நோய் கொண்டார் பேய் கொண்டார். நோய்க்கு இடம் கொடேல். ப பகைவர் பகலில் பக்கம் பார்த்துப் பேசு இரவில் அதுதானும் பேசாதே. பகுத்தறியாமல் உறவு புகை எழு நெருப்பு. பக்கச் சொல் பதினாயிரம். பசியுள்ளவன் ருசி அறியான். பசி வந்திடில் பத்தும் பறந்துபோம் பசித்தபின் புசி. பசுவிலும் ஏழை இல்லை பார்ப்பாரிலும் ஏழையில்லை. பச்சை மண்ணும் சுட்டமண்ணும் ஒட்டுமா? பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ? படிப்பது திருவாசகம் இடிப்பது சிவன் கோவில். படிக்கிறது திருவாய் மொழி இடிக்கிறது பெருமாள் கோயில். படிப்பது பாகவதம், இடிப்பது பெருமாள் கோயில். தன் சொல்லுக்கும், செயலுக்கும் சம்பந்தமில்லாமல் செயல்படுவோரைக் குறித்துச் சொல்லப்படுவது...எப்படி வைணவர்களுக்குப் புனித நூலான பாகவதத்தைப் போற்றிப் படிப்பவர், அதே வைணவக்கோவிலை (பெருமாள்) இடித்து அழிக்க முற்படுவதைப்போல என்னும் பொருளில் பயனாகிறது... படிக்குற வரைக்கும் புள்ள பயிறு பயிறுன்னாச்சாம்; படிச்சபெறவு பசறு பசறுன்னுச்சாம். படைக்கும் ஒருவன் கொடைக்கும் ஒருவன். படையிருந்தால் அரணில்லை. படை முகத்திலும் அறிமுகம் வேண்டும். பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும். (Misery loves company) பட்டவருக்கு பலன் உண்டு; பதவியும் உண்டு! பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும். பட்டால் தெரியும் பட்ட வலி. பட்டா உன்பேரில் சாகுபடி என்பேரில். பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்கு விலை சொல்லுகின்றாய். பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டா, கொட்டைப் பாக்கு என்ன வெலைங்றான். பட்டும் பட்டாடையும் பெட்டியிலிருக்கும், காற்காசு கந்தையில் ஓடி உலாவும். பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை முறைத்தாற் போல. பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துப்பேர். பணத்தைப் பார்க்கிறதா பழைமையைப் பார்க்கிறதா? பணம் என்ன செய்யும் பத்தும் செய்யும். பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துபேர். பணம் உண்டானால் மணம் உண்டு. பணம் பந்தியிலே குணம் குப்பையிலே. பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும். பணம் பாதாளம் மட்டும் பாயும். பண்ணப் பண்ணப் பலவிதம் ஆகும் பண்ணிய பயிரிலே புண்ணியம் தெரியும். பண்டிதன் மகன் பரம சூனியம். பண்டம் ஒரிடம் பழி பத்திடம். பதறாத காரியம் சிதறாது. பதறிய காரியம் சிதறும் (Haste is waste) பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம். பந்திக்கில்லாத வாழைக்காய் பந்தலிலே கட்டித் தொங்குகிறது. பந்திக்கு முந்தி,படைக்கு பிந்தி பல்லு போனா சொல்லு போச்சு. பத்துப்பேருக்குப் பல்குச்சி ஒருவனுக்குத் தலைச்சுமை. பரட்டை பால் வார்க்கும், சுருட்டை சோறு போடும். பரணியிலே பிறந்தால் தரணி ஆளலாம். பரிசாரகன் நம்மாள் ஆனால், எங்கு உட்கார்ந்தால் என்ன? பருத்திக்கு உழும் முன்னே தம்பிக்கு எட்டு முழம். பலநாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான். பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான். பலநாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான். பல்லக்கு ஏற யோகம் உண்டு உன்னி ஏறச் சீவன் இல்லை. பழகப் பழகப் பாலும் புளிக்கும். (Familiarity breeds contempt) பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம். பழுத்த ஒலையைப் பார்த்துக் குருத்தோலை சிரிக்கிறதாம். பழுத்த பழம் கொம்பிலே நிற்குமா? பழம் பழுத்தால் , கொம்பிலே தங்காது. பழுத்த மரம்தான் கல்லடி படும். பழம் நழுவிப்பாலில் விழுந்தாற்போல! பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு வொதவாது. பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா? பனி பெய்து குளம் நிரம்பாது. பனி பெய்தால் மழை இல்லை, பழம் இருந்தால் பூ இல்லை. பனை நிழலும் நிழலோ, பகைவர் உறவும் உறவோ? பனை மரத்தின் கீழே பாலைக் குடித்தாலும் கள் என்று நினைப்பர். பனை மர நிழலும் சரி, மறப்பய உறவும் சரி. பனை மரத்து நிழல்ல பாய விரிச்சு படுத்த மாதிரி பாடா படுத்துது! நிழலும் ஒரு அடி. நிம்மதியும் அதுக்குள்ளே. பன்றிக்குப் பின்னால் போகிற கன்றும் கெடும். பன்றியோடு சேர்ந்த கன்றும் மலம் தின்னுமாம். பன்றி பல குட்டி சிங்கம் ஒரு குட்டி. பக்கத்து வீட்டு சாம்பாருக்கு ருசி அதிகம். பகலில் பசுமாடே கண்ணுக்குத் தெரியாது, இரவில் எருமைமாடா தெரியப்போகிறது? பா பாக்க ஒரு தரம் கும்புட ஒரு தரமா? பாட்டி சொல்லைத் தட்டாதே. பாண்சேரிப் பற்கிளக்கு மாறு (பண்டைத் தமிழ்நாட்டில் இசைத்தமிழைச் சிறப்பாய் வளர்த்துவந்தவர் பறையருள், ஒரு பிரிவினரான பாணரே.) பாத்திரமறிந்து பிச்சை இடு, கோத்திரமறிந்து பெண்ணை எடு. பாம்பாட்டிக்குப் பாம்பிலே சாவு, கள்ளனுக்கு களவிலே சாவு . பாம்பின் கால் பாம்பறியும். பாம்பும் சாகக் கூடாது கம்பும் உடையக் கூடாது. பாம்பு தின்கிற ஊர் போனால், நடுமுறி தமக்கு என்று இருக்க வேண்டும்! பாம்பு தின்ற ஊருக்குப்போனா நடுக்கண்டம் நம்ப கண்டம். பாம்பு என்று அடிக்கவும் முடியாது, பழுதை என்று தாண்டவும் முடியாது. பாம்பு கடிச்சுதா? பயம் கடிச்சுதா? பாம்பு கடித்தால் பத்து நிமிஷம், அரணை கடித்தால் அரை நிமிஷம். பாம்பு என்றால் படையும் நடுங்கும். பாரியாள் ரூபவதியானால் தன் சத்துரு. பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன். பாலூட்டி வளர்த்தாலும் பாம்பின் குணம் மாறுமா? பாலைக் குடித்ததுமட்டு மல்லாமல் பூனை பானையை வேறுடைத்ததாம்! பானை பிடித்தவள் பாக்கியசாலி. பி பிஞ்சில வளெயாதது கம்புல வளெயுமா? பிள்ளை இல்லா வீட்டுக் கிழவன் துள்ளி விளையாடினானாம்! பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டிவிட்டக் கதையாக... பிச்சை எடுத்ததாம் பெருமாள் அதை தட்டிப் பறிச்சுதாம் அனுமார். பு புகைக்கு தப்பி, அடுப்பில் விழுந்த மாதிரி. புத்திகெட்ட இராசாவுக்கு மதிகெட்ட மந்திரி. புத்திமான் பலவான். புலி அடிச்சுதா? கிலி அடிச்சுதா? புலிக்குப் பிறந்தது பூனையாய்ப் போகுமா? புலிக்கு பயந்து சிங்கத்தின் வாயில் விழுந்தானாம்! புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டதாம். புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம். புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது. புலவர் போற்றினும் போற்றுவர், தூற்றினும் தூற்றுவர். பூ பூனை கண்ணை மூடினால் பூலோகம் இருண்டு போய்விடுமா? பூனை குட்டியை மாத்தினாற்போல. பூ மலர்ந்து கெட்டது வாய் விரிந்து கெட்டது பூமியைப்போலப் பொறுமை வேண்டும். பூவிற்றகாசு மணக்குமா? பூனைக்கு கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம். பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும். புயலுக்குப் பின்னே அமைதி. பூனை உள்ள இடத்தில் எலி பேரன் பேத்தி எடுக்குது. பூ வின் மற்றோருப் பெயர் பெண். பெ பெட்டைக் கோழி எட்டிக் கொத்தாது பெண் என்றால் பேயும் இரங்கும். பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு. பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும். பெண்ணென்று பிறந்த போது புருடன் பிறந்திருப்பான். பெண் வளர்த்தி பீர்க்கங் கொடி. பெண்ணுக்கு இடம் கொடேல். பெண் சிரித்தால் போச்சு, புகையிலை விரிந்தால் போச்சு!! பெண்டாட்டி இல்லை, கருவும் இல்லை மகனின் பெயர் கரிகாலனாம்.... பெத்த அம்மா செத்தா பெத்த அப்பன் சித்தப்பன் பெருமாள் இருக்கிற வரையில் திருநாள் வரும். பெருமை ஒருமுறம்; புடைத்து எடுத்தால் ஒன்றும் இல்லை! பெருமையும் சிறுமையும் வாயால் வரும். பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு. பெற்றால் தான் பிள்ளையா? பெண்பிள்ளை சிரித்தால் போச்சு, புகையிலை விரிந்தால் போச்சு. பெண்ணும் போதை தரும், கள்ளும் போதை தரும் இதற்கு தான் நாம் பெண்கள் என்று கூறுகிறோம் புகையிலை சுருள்நிலையிலிருந்து அகன்று விரிந்தால் பயன்படுத்தப் பக்குவமாகிவிட்டதென்று செடியிலிருந்து பறித்துவிடுவார்கள் அதுபோலவே ஒரு கன்னிப்பெண் ஒருவனைப் பார்த்து நட்பாகச் சிரித்தாலும், அவள் தன்னை விரும்புகிறாள் என்று தவறாக நினைத்து அவளை தன் காமவாஞ்சைக்கு பயன்படுத்திக்கொள்ள முற்படுவன் என்றுப்பொருள்... பே பேசப் பேச மாசு அறும். பேசாதிருந்தால் பிழையொன்றுமில்லை. பேராசை பெருநட்டம். பேராசைக்காரனைப் பெரும்புளுகன் வெல்லுவான். பேர் இல்லாச் சந்நிதி பாழ், பிள்ளை இல்லாச் செல்வம் பாழ் பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள். எவ்வளவு மேலான/புனிதமான விடயங்களும் தீயவன்/கொடுங்கோலன் ஆட்சிபுரியும்போது அவை அந்த நாட்டில் கெட்டு,அழிவுறும் என்பது பொருள். பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் முருங்கை மரத்தில் ஏறத்தான் வேண்டும். பொ பொங்கும் காலம் புளி , மங்குங் காலம் மாங்காய். பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை , மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை. பொய் சொன்ன வாய்க்குப் போசனங் கிடையாது. பொருள் இல்லார்க்கு இவ்வுலகு இல்லை, அருள் இல்லார்க்கு அவ்வுலகு இல்லை. பொறுத்தார் பூமி ஆள்வார் பொங்கினார் காடாள்வார். பொறி வென்றவனே அறிவின் குருவாம். பொறுமை கடலினும் பெரிது. பொற்கலம் ஒலிக்காது, வெண்கலம் ஒலிக்கும். பொன் ஆபரணத்தைப் பார்க்கிலும் புகழ் ஆபரணமே பெரிது. பொன் குடத்திற்கு பொட்டிட்டா பார்க்கணும்? பொக்கை வாயனுக்கு பொரி உருண்டை கிடைத்தாற் போல... போ போதாத காலத்தில் புடுக்கும் பாம்பாய்ப் பிடுங்கும். போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. போரோடு தின்கிற மாட்டுக்குப் பிடுங்கி போட்டுக் கட்டுமா? போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன். போகாத ஊருக்கு வழி காட்டுகிறான்/வழி சொல்லுகிறான். செயல்படுத்த முடியாத காரியங்கள்/செயல்களைப்பற்றி ஒருவர் பேசும்பொது/சொல்லும்போது, எதிர்த் தரப்பார் கையாளும் பழமொழி..ஒரு ஊரே இல்லை ஆனால் அதற்குப்போக வழி காட்டுகிறான் என்பதாகும்... ம மகன் செத்தாலும் சாகட்டும், மருமகள் தாலி அறுக்கணும். மடியிலே கனமிருந்தால்தான் வழியிலே பயம். மடை திறந்த வெள்ளம் போல ...... மட்டான போசனம் மனதிற்கு மகிழ்ச்சி. மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா? இது 'மண்குதிரை (மண்குதிர்) நம்பி ஆற்றில் இறங்கலாமா' என்பதன் திரிந்த வழக்கு மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்கலாமா?மண்டையுள்ள வரை சளி போகாது. மண்குதிர் என்பது புதுமணல் மேடு. அதை நம்பி ஆற்றில் இறங்கினால் புதைந்துவிட வாய்ப்புண்டு. மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை பொல்லாது. மணி அடித்தால் சோறு, மயிர் முளைத்தால் மொட்டை. மதியார் வாசலை மிதியாதிருப்பதே உத்தமம். மதியாதார் வாயிலை மிதியாமை கோடி பெறும். மந்திரிக்கும் உண்டு மதிக்கேடு. மரம் சும்மாயிருந்தாலும் காற்று விடுமா? மரம் செவனேன்னு கெடந்தாலும், காத்து கடனேன்னு அலைகழிக்குமாம் மரம் வெட்டுகிறவனுக்கு நிழலும்..., மண் தோடுகிறவனுக்கு இடமும் கொடுக்கும். மரம் வைத்தவன் தண்ணீர் வார்ப்பான். மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய். மருந்தும் விருந்தும் மூன்று வேளை. மருந்தே யாயினும் விருந்தோடு உண். மலிந்த சரக்குக் கடைத் தெருவுக்கு வரும். மலை அத்தனை சாமிக்குக் கடுகு அத்தனை கர்ப்பூரம். மலை ஏறினாலும் மச்சினன் உதவி தேவை. மலையைத் துளைக்கச் சிற்றுளி போதாதா? மலை வாயில பொழுது, மக்கள் வாயில சோறு. மயிரை கட்டி மலையை இழு. வந்தால் மலை போனால் மயிர் மயிலே மயிலே என்றால் இறகு போடுமா? மல்லாந்து உமிழ்ந்தால் மார்மேல் விழும். மல்லாந்து படுத்துக்கொண்டு காறி துப்பினாற் போல. மவுனம் கலக நாசம் மழைமுகம் காணாத பயிரும் தாய்முகம் காணாத பிள்ளையும். மழை விட்டாலும் தூவானம் விடவில்லை. மனதிலிருக்கும் இரகசியம் மதி கேடனுக்கு வாக்கிலே. மனமுரண்டிற்கு மருந்தில்லை. மனம் உண்டானால் இடம் உண்டு. மனம் இருந்தால் மார்க்கமும் உண்டு. மனம் தடுமாறினால் மாற்றானுக்கு வலிமை. மனம் போல வாழ்வு. மனையுமில்லை, கருவுமில்லை மகனின் பெயர் சங்கிலிக்கருப்பனாம்! அடிப்படையான விடயங்கள் கைவசம் எதுவுமில்லாமல் பெரிய திட்டங்களும், எதிர்ப்பார்ப்புகளும் கொண்டவர்களைப் பரிகாசம் செய்யும் பழமொழி...எப்படி ஒருவன் தனக்கு பெண்டாட்டியில்லாமல், இருந்தாலும் அவள் கர்ப்பமாக முடியாவிட்டாலும், தன்மகன் இருப்பதாக நினைத்துக்கொண்டு, அவனுக்கொரு பெயரிட்டு மகிழ்வதைப்போல என்னும் பொருளில் பயன்படுகிறது... மன்னன் எப்படியே மன்னுயிர் அப்படி. மண்ணுயிரை தன்னுயிர்போல் நினை. மணலை கயிறாக திரிப்பது போல. .. மந்திரத்தால் மாங்காய் விழாது! மழை விட்டும் தூவானம் விடவில்லை! மா மாதா பிதா செய்தது மக்களைக் காக்கும். தாயும் தந்தையும் செய்த நற்செயல்களால் விளைந்த புண்ணியப் பலன்கள் அவர்களை மட்டுமல்லாது, அவர்கள் பெற்றப் பிள்ளைகளையும் காக்கும் என்பது பொருள் மாடம் இடிந்தால் கூடம். மாடு எளைச்சாலும் கொம்பு எளைக்காது! மாடு எளைச்சாலும் கொம்பு எளைக்குமா? மாடு கிழமானாலும் பாலின் சுவை போகுமா? மாடு கெட்டால் தேடலாம் மனிதர் கெட்டால் தேடலாமா? மாடு மேய்க்காமற் கெட்டது பயிர் பார்க்காமற் கெட்டது. மாடு வாங்கறதுக்கு முன்னால நெய் கலயம் தேடுனது மாதிரி மாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும். மா பழுத்தால் கிளிக்காம், வேம்பு பழுத்தால் காக்கைக்காம். மாமியாரும் ஒரு வீட்டு மாட்டுப் பெண்தான். மாமியார்க்குச் சாமியார் இவள். மாமியார் செத்ததற்கு மருமகள் அழுதது போல். மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம். மாமியார் உடைத்தால் மண்கலம், மாட்டுப்பெண் உடைத்தால் பொன்கலம்! மாமியார் மெச்சின மருமகளில்லை, மருமகள் மெச்சின மாமியாரில்லை. மாரடித்த கூலி மடி மேலே. மாரிக்காலத்தில் பதின்கல மோரும் கோடைக்காலத்தில் ஒருபடி நீருஞ் சரி. மாரி யல்லது காரியம் இல்லை. மாவுக்குத் தக்க பணியாரம்.(மாவுக்கேத்தப் பணியாரம்) மாற்றானுக்கு இடங் கொடேல். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு! மானம் பெரிதோ? உயிர் பெரிதோ? மானைக் காட்டி மானைப் பிடிப்பார். மானத்தை விட்டால் மார் மட்டும் சோறு. மி மின்னுவதெல்லாம் பொன்னல்ல மிஞ்சியது கொண்டு மேற்கே போகுதல் ஆகாது. மிதித்தாரை கடியாத பாம்பு உண்டோ? மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை. மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய். மீ மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது. மீன் குஞ்சுக்கு நீந்தவா கற்றுக்கொடுக்கணும்? மீன் வித்த காசு நாறுமா? மீ தூண் விரும்பேல். மு முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா ? முன் ஏர் சென்ற வழியே, பின் ஏர் செல்லும். (பெற்றோர் வழிதான், குடும்பம் செல்லும்.) முன் ஏர் போன வழிப் பின் ஏர். முன்கை நீண்டால்தான் புறங்கை நீளும். முன்கை நீண்டால் முழங்கை நீளும். முடிச்சு போட்டு பேசறவங்க, முட்டாள்.( நன்கு அறியாமல் பேசக்கூடாது.) முட்டிக்கு போனாலும் மூன்று பேர் ஆகாது.....(முட்டி என்றால் பிச்சை) முண்டச்சிக்கு வருவதெல்லாம் முறட்டு இழவாம்! முழுக்க நனஞ்ச பின் முக்காடு எதுக்கு? முழு பூசனிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா? முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்தாற் போல. முகத்துக்கு முகம் கண்ணாடி முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா? முடங்க பாய் இல்லையினு சடங்க நிறுத்த முடியுமா? முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் பட்டாற்போல!.. முட்டாள் தனத்துக்கு முதல் பாக்குக்காரன். முட்டையிடுகிற கோழிக்கு வருத்தம் தெரியும். முட்டிக்கு (பிச்சைக்கு) போனாலும் மூன்று பேர் ஆகாது. முதலியார் டம்பம் விளக்கெண்ணெய்க்குக் கேடு. முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா முதல் கோணல் முற்றுங் கோணல் முத்தால் நத்தைப் பெருமைப்படும் , மூடர் எத்தாலும் பெருமை படார். முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்! முயற்சி திருவினை ஆக்கும். முருங்கை பருத்தால் தூணாகுமா? முள்ளு முனையிலே மூணு குளமாம்! மிகச் சிறிய பிரச்சினை/விடயத்திலும், சுமுகமாக இல்லாமல், ஒருவருக்கொருவர் முரண்டுப் பிடித்துக்கொண்டு ஒற்றுமையில்லாமல் பிரிந்துக் கிடப்பது என்றுப் பொருள்...முள்ளின் முனை எவ்வளவு சிறியது!...அதில் மூன்று பின்னங்களை உண்டாக்குவது எப்படி சரியல்லவோ அப்படி என்பதாம்... முள்ளுமேல் சீலைபோட்டால் மெல்ல மெல்லதான் வாங்கவேண்டும். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். முற்றும் நனைந்தவர்களுக்கு ஈரம் ஏது? முன் வைத்த காலைப் பின் வைக்காதே! முன்ன பேயாமல் கெடுக்கும், பின்ன பேஞ்சு அழிக்கும். முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ? மூ மூட கூட்டுறவு முழுதும் அபாயம். மூத்தோர் சொல் வார்த்தை அமுதம். மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக்காயும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும். மூன்று முறை முகத்தில் அடித்தால் புத்தருக்கும் கோபம் வரும். மூர்க்கனுக்கு செய்யாதே உபதேசம். மூர்த்தி சிறியதானாலும் கீர்த்தி பெரியது. மெ மெய்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை. மெல்லப்பாயும் தண்ணீர் கல்லையும் குழியாக்கும். மே மேருவைச் சார்ந்த காகமும் பொன்னிறம் மேற்கே மழை பெய்தால் கிழக்கே வெள்ளம் வரும் மொ மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டாற்போல! மொழி தப்பினவன் வழி தப்பினவன் மோ மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள். மோரை பெருக்கு, நெய்யை உருக்கு. மெளனம் மலையைச் சாதிக்கும். ய யதார்த்தவாதி வெகுசன விரோதி. உள்ளதை உள்ளபடியே, ஒளிவு, மறைவு இல்லாமல், நடைமுறைப்படி சொல்பவன்/பேசுபவன் பெரும்பாலாருக்கு/எல்லாருக்கும் பிடிக்காத விரோதி போலாகிறான் என்பது கருத்து. யா யார் இட்ட சாபமோ? அடிநாளின் தீவினையோ? யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன். யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே. யானைக்கு வாலாக இருப்பதைவிட, எறும்புக்குத் தலையாக இருப்பது மேல். யானைப் பசிக்கு சோளப் பொரி. யானை படுத்தால் குதிரை உயரம் (அதனால், யானையாக எழுந்து நில் என்ற பொருள்). யோ யோக்கியன் வர்றான் சொம்பெடுத்து உள்ள வை. ரா ராமேஸ்வரம் போனாலும் சனீஸ்வரன் விடாது. ராஜாவ மிஞ்சுன ராஜ விசுவாசி. வ வஞ்சகம் வாழ்வைக் கெடுக்கும். வட்டி ஆசை முதலுக்கு கேடு. வடக்குப் பார்த்த மச்சு வீட்டைப் பார்க்கிலும் தெற்குப் பார்த்த குச்சு வீடு நல்லது. வடக்கே கருத்தால் மழை வரும். வண்ணானுக்கு வண்ணாத்தி மேல் மோகம், வண்ணாத்திக்கோ கழுதை மேல் மோகம். வணங்கின முள் பிழைக்கும். வணங்குன புல்லு தைக்கும். வந்த மாட்டயும் கட்ட மாட்டான் வராத மாட்டயும் தேட மாட்டான். வந்த விதி வந்தால் வாய் திறக்க வழியிருக்காது! வந்த வேலெயப் பாக்காம பந்தக்காலெ ஆட்னானான். வந்ததை வரப்படுத்தடா வலக்காட்டு ராமா! வந்தா வரவுல வை வராட்டி செலவுல வை. வரவு எட்டணா செலவு பத்தணா. வரவுக்குத் தக்கபடி செலவை வரையறு. வரிந்து இட்ட அன்னமும் சொரிந்து இட்ட எண்ணெய்யும்... (ஒட்டும்) வருந்தினால் வாராதது இல்லை. வரும் விதி வந்தா பட்டே ஆகவேண்டும். வல்லான் வகுத்ததே வாய்க்கால் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு வல்லூறு பார்வை இங்கே. வௌவால் பார்வை எங்கே? வழவழத்த உறவைப் பார்க்கிலும் வைரம் பற்றிய பகை நன்று. வழிவழியாப் போகும்போது விதி விதியா வருது வளத்த பிள்ளை சோறுபோடாவிடிலும் வைத்த பிள்ளை சோறு போடும். வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தாற் (பாய்ந்தது)போல..... வளவனாயினும் அளவறிந் தளித்துண் வா வாங்கிறதைப் போலிருக்க வேண்டும் கொடுக்கிறதும் வாங்கப்போனால் ஆனை விலை, விற்கப்போனால் குதிரை விலை. வாய்ச்சொல் தலசுமை (வாய்ச்சொல் தலமூட்ட) வாயிலிருக்கிறது வழி! வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.(பிழைத்துக்கொள்ளும்) வாய் சர்க்கரை கை கருணைக் கிழங்கு. வாய் மதத்தால் வாழ்வு இழக்கும். வாய்க்கேற்ற கை (வெறும் பேச்சு மட்டுமல்ல, பேசுமளவுக்கு காரியங்களும் செய்வர் எனப்பொருள்) வாழ்கிறதும் கெடுகிறதும் வாயினால்தான். வாழ்வும் தாழ்வும் சில காலம். வாழும் பிள்ளையை மண் விளையாட்டில் தெரியும். வாழைப்பழம் வேண்டாமென்னும் குரங்குமுண்டோ? வாழையடி வாழையாக ......... வாணலிக்குத் தப்பி அடுப்பில் விழுந்த கதையாய் ..... வானம் பொய்த்தாலும் நீதி பொய்க்காது வி விண் பொய்த்தால் மண் பொய்க்கும். விரலுக்குத் தகுந்த வீக்கம். விறகு வெட்டிக்குத் தலைவலி வந்தா, விறகால ரெண்டு போடு விடிய விடிய ராமாயணம் கேட்டு, விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை. விடிய விடிய வெகுமானம் விடிஞ்சா அவமானம். விடு என்றால் பாம்புக்கு கோபம், கடி என்றால் தவளைக்கு கோபம். விதி எப்படியோ மதி அப்படி. விதியை மதியால் வெல்லலாம். வித்தைக்கு அழிவில்லை. விந்து விட்டான், நொந்து கெட்டான்! மிதமிஞ்சிய சம்போகத்தில் ஈடுபட்டு வீரியத்தை அதிக அளவில் இழப்பவன், பற்பல உடற் உபாதைகளால் பாதிக்கப்பட்டு மிகவருந்துவர் என்றுப் பொருள் வியாதிக்கு மருந்துண்டு விதிக்கு மருந்துண்டா? விருப்பத்தினால் ஆகாதது வீம்பினால் ஆகுமா? விரை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா? வில்வப்பழம் தின்பார் பித்தம் போக பனம் பழம் தின்பார் பசி போக. விலை மோரில் வெண்ணை எடுத்துத் தலைச்சனுக்குக் கல்யாணம் செய்வாளாம் விளக்கு மாற்றுக்குப் பட்டுக் குஞ்சமா? விளையாட்டாய் இருந்தது வினையாய் முடிந்தது. விளையும் பயிர் முளையிலே தெரியும். வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான் விருந்தும் மருந்தும் மூன்று நாள். விற்கப்போனால் குதிரை விலை, வாங்கப்போனால் ஆனை விலை. வீ வீட்டுக்கு வீடு மண் வாசற்படி வீட்டுக்கு அடங்காத பிள்ளை ஊருக்கு அடங்கும்! வீடு போ போ எங்குது, காடு வா வா எங்குது. வீட்டுத் திருடனை பிடிப்பது அந்த கடவுளுக்கும் ஏலாது. வீம்புக்கு ஊம்பினாற் போல! வெ வெட்டிண்டு வா என்றால் கட்டிண்டு வருவான். வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு. வெட்றவன தான ஆடு நம்பும். வெண்கலக்கடையில் யானை புகுந்தாற் போல.... வெண்டை முதிர்ந்தாலும் பிரம்மசாரி முதிர்ந்தாலும் வேலைக்கு ஆகாது!! வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல். வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன். வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப் போல.... வெயிலின் அருமை நிழலில் தெரியும்! வெளங்தாவன் வேலைக்கு போனான்னாம் வேலெ ஆப்புட்டுச்சாம் கூலி ஆப்புடலயாம். வெள்ளத்த தான ஈ மொய்க்கும். வெளுத்ததெல்லாம் பாலல்ல. வெறும் வாய் மெல்லுகிறவளுக்கு அவல் கிடைச்சதுபோல . வே வேலிக்கு ஓணான் சாட்சி. வேலிலா போற ஓணான வேட்டிக்குள்ள உட்டாப்ல. வேலிக்குப் போட்ட முள் காலுக்கு வினையாச்சு. வேலியே பயிரை மேய்ந்தாற் போல... வேலை வரும்போதுதான் பேல வரும். வேண்டும் என்றால் வேரிலும் காய்க்கும்; வேண்டாவிட்டால் கொம்பிலும் காய்க்காது! வேண்டாத பெண்டாட்டி கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம். (Faults are thick when love is thin) வேண்டா வெறுப்புக்கு புள்ள பெத்து காண்டாமிருகம்-னு பேரு வச்சது மாதிரி... வேதாரண்யம் விளக்கழகு வேளையும், நாழிகையும் வந்தால், வேண்டாம் என்றாலும் நிற்காது. வேளைக் கள்ளிக்குப் பிள்ளை சாக்கு. வை வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்குக் கொடு. வைத்தியனுக்கு தன் வைத்தியம் பலிக்காது. வைத்தியன் பெண்டாட்டி சாவதில்லையா? ஜோசியன் பெண் அறுப்பதில்லையா? வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை. வைத்தால் பிள்ளையார், வழித்து எறிந்தால் சாணி.
Make a Free Website with Yola.